நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுகளுக்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செந்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் திட்டம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது மத்திய நிதி அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.


பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயதை 18-லிருந்து 21 ஆக மாற்ற அரசு திட்டம்..!


கொரோனா வைரஸ் பூட்டுதலின் போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அதிகாரம் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக இந்த திட்டத்தை ஜூன் 20 அன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கிறது.


  • பிரதமர் கரிப் கல்யாண் ரோஜ்கர் அபியான் என்றால் என்ன?


புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் முயற்சியாக, பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் 50,000 கோடி மதிப்புள்ள பொதுப்பணித் திட்டத்தை வெளியிடுகிறார். பீகார், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய 116 மாவட்டங்களில் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்புகளை வழக்க மத்திய அரசு காத்திருக்கிறது.


6 மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களுக்கு பெருமளவில் திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் திறன் தொகுப்புகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக நுணுக்கமாக வரைபடமாக்கியுள்ளன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.


பீகார், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஆறு மாநிலங்களில் பரவிய 116 மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் திரும்பி வந்ததை நாங்கள் கண்டறிந்துள்ளோம். COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான வேலைகள் இந்த திட்டத்தின் கீழ் உறுதிசெய்யப்படும்.


GST தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் இருக்காது: நிர்மலா சீதாராமன்...


கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் திரும்பி வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க 25 வெவ்வேறு திட்டங்களை முன்னெடுத்துச்செல்ல அரசு முயற்சிக்கிறது. இதற்காக ரூ.50,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


நாட்டின் பல மாநிலங்களில் இருந்து திரும்பி வந்த புலம்பெயர்ந்தோரின் திறன் தொகுப்புகளை அரசாங்கம் வரைபடமாக்கியுள்ளது. புலம்பெயர்ந்தோருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் 25 வெவ்வேறு திட்டங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.