அசத்தலான 5 முதலீடு திட்டங்கள்! வயதான காலத்தில் பண கஷ்டம் இருக்காது!
Retirement Planning: முதலீடு செய்வது எப்போதும் பணத்திற்கான பாதுகாப்பான வழியாக உள்ளது. குறிப்பாக ஓய்வூதிய காலத்தில் பெரிதும் உதவுகிறது.
அரசு அல்லது தனியார் சார்ந்த எந்த முதலீடு திட்டங்களிலும் முதலீடு செய்வது பாதுகாப்பான ஒன்று. இதனை அவரச காலத்திலும், ஓய்வு பெற்ற பின்பும் தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருமான ஆதாரத்தையும் பெற முடியும். ஓய்வுக்குப் பிறகு உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த பல முதலீடு திட்டங்கள் இந்தியாவில் உள்ளன. ஓய்வுக்கு முன்பும், பின்பும் என நல்ல லாபம் கிடைக்கும் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் அரசு மற்றும் தனியார் திட்டங்கள் உள்ளன. சிறப்பான 5 ஓய்வூதிய திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | NPS: ஓய்வுக்கு பிறகும் ஒய்யாரமா வாழலாம்.... இதன் அட்டகாசமான நன்மைகளின் பட்டியல் இதோ
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வு காலத்தில் உங்களின் பண தேவைகளை பூர்த்தி செய்யலாம். இதில் உள்ள சிறப்பம்சம் என்ன வென்றால் 500 ரூபாயிலிருந்து உங்களால முதலீட்டைத் தொடங்க முடியும். தற்போது இந்தத் திட்டம் 7.1 சதவீத வட்டியை தருகிறது. பொது வருங்கால வைப்பு திட்டத்தில் 15 வருட காலத்திற்கு முதலீடு செய்ய முடியும். ஒரு வருடத்தில் அதிகபட்சமாக நீங்கள் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் வருமான வரியிலும் விலக்கு பெறலாம்.
எஸ்ஐபி முதலீடு
எஸ்ஐபி அதாவது சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது ஓய்வு பெறும் நேரத்தில் உங்களுக்கு அதிக பணவரவை ஏற்படுத்தி கொடுக்கும். இந்த திட்டத்திலும் உங்களால் ரூ.500ல் இருந்து முதலீடு செய்ய முடியும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 வீதம் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ரூ.1 கோடி வரை நிதியை பெற முடியும். ஒரு நிதி ஆண்டுக்கு 12 சதவீத வட்டியை தருகிறது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வூதியத்திய காலத்தில் அதிக நிதியை உங்களால் பெற முடியும். அஞ்சலகத்தின் இந்தத் திட்டம் தற்போது 8.2 சதவீத வட்டியை தருகிறது. இந்த திட்டத்தில் ரூ.1000 முதல் ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இதனை மொத்தமாகவும் அல்லது சிறிய தொகையாகவோ ஒவ்வொரு மாதமும் டெபாசிட் செய்து கொள்ளலாம். 5 ஆண்டு காலத்தில் வட்டி வடிவில் மாத வருமானம் பெறப்படுகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியில் இருந்து ரூ.1.50 லட்சம் வரை விலக்கு பெற முடியும்.
மாதாந்திர வருமான திட்டம்
மாதாந்திர வருமான திட்டமும் தபால் துறையின் திட்டம் ஆகும். இதில் மொத்த தொகையை முதலீடு செய்வதன் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற முடியும். இந்த திட்டத்தில் வைப்புத்தொகை 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பித் தரப்படுகிறது. தற்போது டெபாசிட் தொகைக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த மாதாந்திர வருமான திட்டத்தில் தனிநபர் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், தம்பதியர் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்து கொள்ள முடியும். இதில், ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.5550ம், தம்பதியருக்கு அதிகபட்சமாக ரூ.9250ம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
அடல் பென்ஷன் யோஜனா
அடல் பென்ஷன் யோஜனா (APY) என்பது ஓய்வு காலத்தில் நிதி உதவியை வழங்கும் ஒரு நல்ல திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் 60 வயதுக்கு பிறகு 1000 ரூபாய் முதல், 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற்று கொள்ள முடியும். இந்த ஓய்வூதியத் தொகை நீங்கள் எவ்வளவு தொகையை டெபாசிட் செய்கிறீர்கள் அதனை பொறுத்து மாறும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ