இந்தியா மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இதற்கு லித்தியம் அயன்பேட்டரிகள் உருவாக்கம் தொடர்பான அடிப்படை கட்டமைப்புகள் அவசியம். அதுமட்டுமல்லாமல் லித்தியம் இருப்பு என்பது அத்தியாவசியமாக இருக்கிறது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் லித்தியம் படிமம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் லித்தியம் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது 7வது இடத்தில் இந்தியாவின் லித்தியம் அளவு இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போதைய சூழலில் இந்த லித்தியம் படிமத்தின் சுரங்கப் பணிகளை மேற்கொள்ளப்போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மிகப்பெரிய லித்தியம் படிமம் என்பதால் தனியார் நிறுவனங்களும் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. ஆனால், 3 நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பேச்சுகள் அடிபடுகிறது. அந்தவகையில் நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் ஆகிய நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று இந்த சுரங்கப் பணிகளை மேற்கொள்ள அதிக வாய்ப்புகள் உள்ளன.   


மேலும் படிக்க | இந்தியாவை விட லித்தியம் கொட்டி கிடக்கும் குட்டி நாடு...! சீனா - அமெரிக்கா இல்லை   


1. நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் 


1981-ல் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் இந்திய அரசு 51.28 சதவீத சமபங்கு வைத்துள்ளது. மே 1989-ல் லண்டன் மெட்டல் எக்ஸ்சேஞ்ச் பதிவு மூலம் சர்வதேச சந்தையில் பெரிய அளவில் நுழைந்த முதல் இந்திய பொதுத்துறை நிறுவனமாக NALCO ஆனது. தற்போது 198 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை இயக்கி வருகிறது. 25 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் பைப்லைனில் உள்ளன.


2. மினரல் எக்ஸ்ப்ளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட்:


பொதுத்துறை நிறுவனம் அக்டோபர் 1972ல் நிறுவப்பட்டது. இது இன்றுவரை 1,593 திட்டங்கள் நிறைவு செய்துள்ளது. டிசம்பர் 2022 நிலவரப்படி 1.96 லட்சம் மில்லியன் டன் கனிமங்கள்/தாதுக்கள் இருப்புக்களை நிறுவியுள்ளது. 


3. இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்:


இந்த பொதுத்துறை நிறுவனம் நவம்பர் 1967-ல் நிறுவப்பட்டது. தற்போது, நிறுவனம் சுரங்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. முதன்மையாக செப்பு செறிவூட்டலை அதன் முக்கிய தயாரிப்பாக விற்பனை செய்கிறது. கடந்த ஆண்டு, சுரங்க அமைச்சகம் KABIL என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கியது. இது லித்தியம், கோபால்ட் போன்ற முக்கியமான மற்றும் மூலோபாய இயல்புடைய வெளிநாட்டில் உள்ள கனிம சொத்துக்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 


1999 ஆம் ஆண்டே ஜம்மு காஷ்மீரில் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. GSI விஞ்ஞானிகள் கே.கே. ஷர்மா மற்றும் SC உப்பல் ஆகியோர் 1999-ல் 67 பக்க அறிக்கையைத் தயாரித்தனர். அதில் லித்தியத்தின் வாய்ப்புகள் ரியாசி பெல்ட்டில் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றியதாகவும், பெல்ட் முழுவதும் அதிக அளவு கனிமங்கள் தொடர்ந்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டில் அதிக அளவு லித்தியம் இருப்பதாக  அப்போதைய இயக்குனர் எம்.ஆர்.கல்சோத்ரா அறிக்கை சமர்பித்திருந்தார். அவரின் அந்த அறிக்கை 1999 ஆம் ஆண்டு முழுமையாக நிரூபனமானது.  


லித்தியம் பயன்பாடு


மின்சார வாகனங்களுக்காக தயாரிக்கப்படும் பேட்டரிகளில் லித்தியம் பயன்படுத்தப்படுகிறது. லித்தியம்-அயன் பேட்டரிகள் மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் லித்தியம் தேவையை பூர்த்தி செய்ய, கனிமத்திற்கான பிற நாடுகளை அரசாங்கம் அதிகளவில் பார்த்து வருகிறது. மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் உட்பட அனைத்து வகையான மின்னணு சாதனங்களிலும் லித்தியம்-அயன் பேட்டரிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரில் காணப்படும் இருப்புக்கள் மூலம், உலக சராசரியுடன் இந்தியா போட்டியிட முடியும்.


மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ