TRAI New Rules: குட் நியூஸ்!! இனி கம்மி விலையில் அதிக நேரம் டிவி பார்க்கலாம்!!
TRAI: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது.
TRAI புதிய வழிகாட்டுதல்கள்: தொலைக்காட்சி பெட்டி முன் அதிகம் அமர்ந்திருக்கும் நபரா நீங்கள்? டிவி பிரியரா நீங்கள்? உங்கள் விட்டில் எப்போதும் ஏதாவது ஒரு சேனல் ஓடிக்கொண்டு இருக்குமா? உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி. TRAI இன் புதிய வழிகாட்டுதலைப் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை பாதிக்கும் புதிய கட்டண ஆணை 2.0ஐ TRAI திருத்தியுள்ளது. புதிய விதிகள் என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.
புதிய விதிகள் என்ன?
புதிய விதிகளின்படி, ரூ.19 அல்லது அதற்கும் குறைவான விலையில் உள்ள அனைத்து சேனல்களும் 'பொக்கே' எனப்படும் தொகுப்பில் சேர்க்கப்படும். TRAI இன் இந்த முடிவுக்குப் பிறகு, கேபிள் மற்றும் DTH வாடிக்கையாளர்களுக்கு அதிக நிவாரணம் கிடைக்கும்.
புதிய விதிகள் 1 பிப்ரவரி 2023 முதல் அமலுக்கு வரும்
TRAI இலிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, புதிய வழிகாட்டுதல் 1 பிப்ரவரி 2023 முதல் நடைமுறைக்கு வரும். இதனுடன், பிப்ரவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு, வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த சேனல்கள் அல்லது சேனல்களின் தொகுப்பிற்கு ஏற்ப சேவைகள் வழங்கப்படுவதை அனைத்து சேனல்களும் உறுதி செய்ய வேண்டும் என்று TRAI கூறியுள்ளது.
மேலும் படிக்க | ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும், 84 நாட்களுக்கு ஜாலி தான்
மாற்றங்கள் பற்றி தெரிவிக்கப்படும்
இதனுடன், அனைத்து ஒளிபரப்பாளர்களும் தங்கள் சேனல், சேனலின் எம்ஆர்பி மற்றும் சேனலின் தொகுப்பு அமைப்பு ஆகியவற்றில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் டிசம்பர் 16 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று TRAI தெரிவித்துள்ளது.
45 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்
இது தவிர, தொகுபின் விலையை நிர்ணயிக்கும் போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள கட்டண சேனல்களின் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) தொகையில் இருந்து ஒளிபரப்பாளர் அதிகபட்சமாக 45 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கலாம் என்றும் TRAI கூறியுள்ளது.
மேலலும் படிக்க | Jio பயனர்களுக்கு அனுப்பிய Welcome Offer: இலவசமாக Jio 5G பெறுவது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ