புதுதில்லி: அரசு துறைகள் தொடர்பாக மத்திய அரசு ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதன் கீழ், இப்போது அரசாங்க அலுவலகத்தின் அதிகாரிகள் தங்களது 15 ஆண்டு பழைய வாகனங்களின் பதிவை 2022 ஏப்ரல் 1 முதல் புதுப்பிக்க முடியாது. இதற்காக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு ஒரு திட்டத்தை தயாரித்துள்ளது. தற்போது, ​​இந்த முன்மொழிவு குறித்து வரைவு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரின் கருத்துக்களும் பரிந்துரைகளும் கோரப்பட்டுள்ளன. பரிந்துரைகளை பரிசீலித்த பின்னர், அமைச்சகம் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும்.
 
புதிய வரைவு அறிவிப்பு மார்ச் 12 அன்று வெளியிடப்பட்டது. இது குறித்து அனைத்து தரப்பினரிடமிருந்தும் 30 நாட்களுக்குள் பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன. 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் திட்டத்தில் தன்னார்வ அடிப்படையில் வாகனத்தை அப்புறப்படுத்தும் கொள்கையை அறிமுகப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ஏப்ரல் 1-க்கு முன்பாக செய்ய வேண்டிய முக்கிய பணிகள்.. இல்லையென்றால் இழப்பு நேரிடும்


அதே நேரத்தில், இந்த கொள்கையின் கீழ், 20 ஆண்டு கால பழமையான தனிநபர் மற்றும் வணிக வாகனங்கள் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்டோமேடிக் பிட்னஸ் டெஸ்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த சோதனையில் தேர்ச்சி பெறாத வாகனங்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதுன் இதுபோன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.


புதிய வாகனங்களை விட பழைய வாகனங்கள் 10-12 மடங்கு அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன என்று போக்குவரத்து அமைச்சர் கூறியது கவனிக்கத்தக்கது. 


மேலும், நாட்டில் போக்குவரத்துத் துறையில் விரிவான மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. இதுதொடர்பாக, காரில் முன் ஏர்பேக்குகளை இந்திய அரசு கட்டாயமாக்கப் போகிறது. காரில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுக்க உள்ளது. முன் சீட்டில் ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் அறிவிப்புக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக போக்குவரத்து அமைச்சகம் சட்ட அமைச்சகத்திற்கு ஒரு திட்டத்தை அனுப்பியிருந்தது. போக்குவரத்து அமைச்சகத்தின் இந்த திட்டத்திற்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ALSO READ | விமானத்தில் மாஸ்க் சரியாக அணியாத பயணிகள் இறக்கிவிடப்படலாம்: DGCA


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR