பாடாய் படுத்தும் ஏசி கோச் பயணிகள்..கடுப்பில் ரயில்வே புதிய உத்தரவு
Indian Railways Rules: தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிப்பதால், ரயிலில் இருக்கும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணைகள் காணாமல் போவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. மக்கள் ரயில்வே கொடுத்த பெட்ஷீட், டவல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார், ஆனால் இனி பயணி அப்படிச் செய்தால், ரயில்வேயால் தண்டிக்கப்படுவார்.
இந்திய ரயில்வேவின் புதிய விதிகள்: தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிப்பதால், ரயிலில் இருக்கும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணைகள் காணாமல் போவதை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஏனெனில் ரயில்லில் பயணிக்கும் மக்களுக்கு ரயில்வே கொடுத்த பெட்ஷீட்கள், துண்டுகளை இவர்கள் தங்களின் வீட்டுக்கு எடுத்துச் செல்கிறார், ஆனால் இனி இதுபோன்ற செயலுக்கு ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பான சில வழிகாட்டுதலைலும் தற்போது ரயில்வே வெளியிட்டுள்ளது.
ரயில்வேக்கு லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளது
பயணிகளின் இந்த பழக்கத்தால், இந்த ஆண்டு ரயில்வேக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பெட்ஷீட்கள், போர்வைகள் தவிர, பயணிகள் ஸ்பூன்கள், கெட்டில்கள், குழாய்கள், கழிப்பறை கிண்ணங்களை திருடுவதால், ரயில்வேக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என இந்தியா ரயில்வே தற்போது தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | கார் லோன் வாங்க போறீங்களா.... இந்த செய்தி உங்களுக்குத் தான்!
எந்த வழியில் அதிக பொருட்கள் திருடப்பட்டுள்ளன?
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மண்டலத்தில் உள்ள ரயில்களில் ரயில்வே பொருட்களை மக்கள் கடுமையாக திருடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. பிலாஸ்பூர் மற்றும் துர்க்கிலிருந்து இயக்கப்படும் நீண்ட தூர விரைவு ரயில்களில் போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணைகள், முகத்துண்டுகள் ஆகியவை தொடர்ந்து திருடப்பட்டு வருகின்றது.
4 மாதங்களில் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளது
பிலாஸ்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படும் ரயில்களில் கடந்த 4 மாதங்களில் சுமார் 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் ரூ.55 லட்சத்து 97 ஆயிரத்து 406 மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வளவு திருடப்பட்டுள்ளது?
கடந்த நான்கு மாதங்களில் 12886 துண்டுகள் திருடப்பட்டுள்ளன, இதன் மதிப்பு ரூ.559381 ஆகும். அதே நேரத்தில் ஏசியில் பயணம் செய்த பயணிகளால் 4 மாதங்களில் 18208 பெட்ஷீட்கள் திருடப்பட்டுள்ளன. இதன் விலை சுமார் ரூ.2816231 ஆகும். இதுதவிர, 19767 தலையணை கவர்கள் திருடப்பட்டுள்ளன, இவற்றின் விவிலை ரூ.1014837, 2796 போர்வைகள் விலை ரூ.1171999, 312 தலையணைகள் ரூ.34956 ஆகும்.
5 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதமும் விதிக்கப்படும்
இந்த நிலையில் இது குறித்து தகவல் அளிக்கும் போது, இவ்வாறு பொருட்களை திருடுவது சட்டப்படி தவறு என இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. அத்தகைய பயணிகள் மீது ரயில்வே சொத்து சட்டம் 1966ன் கீழ் வழக்கு பதிவு செய்து ரயில்வே நடவடிக்கை எடுக்கும். இதில், பயணிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும். இதில், உங்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் விதிக்கப்படும் என இந்தியன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வேயின் இன்னும் சில விதிகளின் விவரங்கள்:
* மது அருந்திவிட்டு ரயிலில் பயணம் செய்தாலோ, அல்லது மதுபானங்களை எடுத்துச்சென்றாலோ, அப்படி செய்பவர்கள் மீது இந்திய ரயில்வே சட்டம் 1989 பிரிவு 165ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரயிலில் தடை செய்யப்பட்ட வேறு ஏதேனும் பொருட்களை யாரேனும் வைத்திருந்தால், அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
* இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ரயிலில் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன் அல்லது மடிக்கணினிகளை சார்ஜ் செய்ய இந்திய ரயில்வே தடை விதித்துள்ளது.
* ரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் சத்தமாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ