FD Interest Rate Of Bank Of Baroda: அதிக லாபம் கொடுத்து, தனது டெர்ம் டெபாசிட் திட்டங்களின் முதலீட்டாளர்களின் பாக்கெட்டுகளை நிரப்பும் வங்கியாக, பாங்க் ஆப் பரோடா செயல்படுகிறது. குறிப்பாக, வங்கி நிலையான வைப்புத்தொகை (Fixed Deposit) திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை 30 அடிப்படை புள்ளிகளுக்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் சாதாரண வாடிக்கையாளர்களுடன் மூத்த குடிமக்களும் அதிக பயன் பெறுவார்கள். புதிய வட்டி விகிதங்களை பாங்க் ஆஃப் பரோடா இன்று (மே 12) முதல் அமல்படுத்துகிறது.
FD வட்டி விகிதங்கள்
பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் பணத்தைச் சேமிக்கும் வாய்ப்பை வழங்குகிறது. வங்கியின் படி, இந்த நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் ரூ. 2 கோடி வரை முதலீடு செய்யலாம். வட்டி விகிதங்களில் மாற்றத்திற்குப் பிறகு, பொது மக்களுக்கான நிலையான வைப்புத்தொகை திட்டத்தின் வட்டி விகிதம் 7.25 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், மூத்த குடிமக்களுக்கான வட்டி 7.75 சதவீதமாக உயர்ந்தது.
பொது குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்கள்
- பாங்க் ஆஃப் பரோடா ஏழு முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்திட்டங்களுக்கு 3 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும்.
- இது 46 முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 4.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- பாங்க் ஆஃப் பரோடா 181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 4.5 சதவீத வட்டியை செலுத்துகிறது.
- 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவான காலக்கட்டத்தில் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 5.75 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
- வங்கி ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு 6.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- இரண்டு ஆண்டுகளுக்கு மேல் மற்றும் மூன்று ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 7.05 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும்.
- மூன்று முதல் பத்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் திட்டங்களுக்கு வங்கி 6.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மேலும் படிக்க | வங்கி கணக்கை ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு மாற்றுவது எப்படி?
மூத்த குடிமக்களுக்கான FD வட்டி விகிதங்கள்
- 7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு வங்கி 3.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- 46 நாட்கள் முதல் 180 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படும்.
- 181 முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 5.75 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
- 211 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 6.25 சதவீத வட்டி விகிதத்தைப் பெறலாம்.
- ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 7.25 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.
- இரண்டு ஆண்டுகள் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான டெபாசிட் திட்டங்களுக்கு வங்கி 7.55 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
- மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு வங்கி 7.15 சதவீத வட்டியை செலுத்துகிறது.
- 5 ஆண்டுகளுக்கு மேல் முதிர்ச்சியடையும் டெபாசிட் திட்டங்களுக்கு 7.55 சதவீத வட்டி விகிதத்தை செலுத்துகிறது.
மேலும் படிக்க | UPI பின் இல்லாமல் பேடிஎம்மில் நீங்கள் பணம் செலுத்தலாம்..! எப்படி தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ