UIDAI: குழந்தைகளின் ஆதார் அட்டை தொடர்பான முக்கிய விதிகள்..!!!

ஆதார் அட்டை என்பது நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் இன்றியமையாத ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும்.
புதுடெல்லி: நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. இது அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள தேவையான முக்கிய ஆவணம் ஆகும். இத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நபரும் தனது மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டையை தேவைக்கேற்ப அவ்வப்போது புதுப்பித்துக்கொள்வது அவசியம். ஆதார் என்பது ஒரு தனித்துவமான 12 இலக்க அடையாள எண் கொண்ட கார்டு ஆகும். ஆதார் அட்டை அரசியலமைப்பு ரீதியாக மிகவும் முக்கியமானது என்பதில் மாற்று கருத்து இல்லை.
எந்தவொரு அரசாங்கத் திட்டத்தின் ஆதாயத்தை பெற ஆதார் அவசியம். டிபிடி, வங்கி கணக்கு, பான் கார்டு அல்லது சொத்து பதிவு போன்ற எல்லா விஷயத்திற்கு, ஆதார் அட்டை மிகவும் அவசியமாக தேவைப்படும் ஆவணமாகும்.
குழந்தைகளின் ஆதார் அட்டையைப் பற்றி கூறவேண்டும் என்றால், பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெறலாம் என UIDAI கூறியுள்ளது. குழந்தைகளின் ஆதார் அட்டைகள், குழந்தையின் 5 வயது மற்றும் 15 வயதில் இரண்டு முறை, ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியது அவசியம். இந்த வகையான புதுப்பித்தல், குழந்தைகளின் பயோமெட்ரிக் புதுப்பித்தல் அதாவது பயோமெட்ரிக் அப்டேஷன் என்று அழைக்கப்படுகிறது. புதுப்பிக்கவில்லை என்றால் அந்த ஆதார் அட்டை செல்லாது.
குழந்தை ஆதார் புதுப்பிப்பது எப்படி:
குழந்தை விவரங்களை புதுப்பிக்க கட்டணம் ஏதும் இல்லை என்று யுஐடிஏஐ (UIDAI) தெரிவித்துள்ளது. புதுப்பிப்புக்க நீங்கள் எந்த வகையான ஆவணத்தையும் வழங்க வேண்டியதில்லை. பெற்றோர்கள் தங்களது அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று, குழந்தையின் ஆதார் அட்டையில் உள்ள பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிக்க முடியும். அருகிலுள்ள ஆதார் மையம் தொடர்பான தகவல் UIDAI இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தையின் ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது:
பெற்றோர் அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு சென்று, பிறப்புச் சான்றிதழ் அல்லது மருத்துவமனை வழங்கிய டிஸ்சார்ஜ் கார்டு / ரசீது ஆகியவற்றை கொடுத்து, குழந்தையின் ஆதார் அட்டையைப் பெறலாம். ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, பயோமெட்ரிக்ஸ், கைரேகைகள் மற்றும் வேறு விவரங்கள் தேவைப்படாது. எனவே பின்னர் புதுப்பிக்க வேண்டியது அவசியம். மேலும் இது தொடர்பான தகவலுக்கு, நீங்கள் அருகிலுள்ள ஆதார் மையம் செல்லலாம் அல்லது யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விபரங்களை பெறலாம்.
மேலும் படிக்க | Aadhaar Card பெற தேவையான ஆவணங்கள் இல்லையா.. கவலை வேண்டாம்..!!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR