Aadhaar Card Latest Update: இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பணிகளுக்கும் ஆதார் அட்டை அவசியம். ஆதார் என்பது முக்கியமான ஒரு ஆவணமாக மாறி உள்ளது. இன்றைய காலகட்டத்தில் ரேஷன் பெறுவது முதல் சிம் கார்டு பெறுவது வரை, பைக், கார், தங்கம் என எது வாங்கினாலும் ஆதார் அவசியம். மேலும் ஆதார் கார்ட் நமது அடையாளத்தை நிரூபிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது போல ஆதார் கார்டில் பல நன்மைகள் உள்ளன. இதற்கிடையில், தற்போது மக்கள் இ-ஆதார், mAadhaar ஆப் மற்றும் ஆதார் PVC கார்டு போன்ற ஆதார் அட்டையின் பிற வடிவங்களைப் அதிகம் பயன்படுத்துகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


இந்நிலையில், இவை அனைத்தும் அதிகார்வப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருந்து வந்தது.  பல இடங்களில் இவை செல்லுபடியாகும் என்று மக்களுக்குச் இதுவரை சொல்லப்படவில்லை. தற்போது இது தொடர்பான குழப்பத்தை தீர்க்க UIDAI முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீபத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் கார்ட் எந்த விதத்தில் இருந்தாலும் அது செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது.  அனைத்து இடங்களிலும் சமமாக செல்லுபடியாகும் என்று ட்வீட் செய்து தெரிவித்தது. இந்த ட்வீட்டில் நான்கு தளங்களின் புகைப்படங்களை வெளியிட்டு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நீங்கள் எந்த ஆதார் அட்டையையும் பயன்படுத்தலாம் மற்றும் அனைத்தும் சமமாக செல்லுபடியாகும்.



m-Aadhaar: இதன் பொருள் மொபைல் ஆப் ஆகும். mAadhaar சரியான அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் மொபைல் போன் மூலம் எப்போதும் தகவல்களை பெற்று கொள்ளலாம். இந்த செயலியில், ஆதார் எண் போன்ற விவரங்களை ஒருமுறை பூர்த்தி செய்தால் எப்போதும் சேமிப்பில் இருக்கும். 


e-Aadhaar: இ-ஆதார் என்பது மின்னணு ஆதார் கார்ட் என்பது ஆகும். இது கடவுச்சொல் பாதுகாப்புடன் வருகிறது. பயனர்கள் அதை தங்கள் தொலைபேசியிலோ அல்லது வேறு எந்த சாதனத்திலோ சேமித்து வைத்து கொள்ளலாம். இதன் மூலம் UIDAI இணையதளத்தில் இருந்தும் இ-ஆதார் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


PVC ஆதார் கார்டு: இது ஆதார் அட்டையைப் போலவே உள்ள மற்றொரு வடிவம் ஆகும். ஆனால் இது அதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. பழைய ஆதார் அட்டை ஒரு பொதுவான பிளாஸ்டிக் காகிதத்தால் வழங்கப்பட்டது. அதேசமயம் ஆதார் பிவிசி கார்டு என்பது கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் பான் கார்டு போன்ற கார்டுகளைப் போன்று வழங்கப்படுகிறது. இவை பிளாஸ்டிக் அட்டையில் வழங்கப்படுவதால் எளிதாக கிழியாது. அதே சமயம் மழையில் நனைந்தாலும் அல்லது வேறு எந்த காரணத்தினாலும் சேதமடையாது. ரூ. 50 மட்டும் செலுத்தி UIDAIன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெற்று கொள்ளலாம்.


மேலும் படிக்க | நிம்மதியாக ஓய்வூதியம் பெற வேண்டுமா? அப்போ ‘இந்த’ திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ