NRI-ஆ நீங்கள்? ஆதார் அட்டை பெற எளிமையான வழிகள்!
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் ஆதார் அட்டை இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது.
இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணங்களில் ஒன்று தான் ஆதார் அட்டை, இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் ஆதார் அட்டை இந்திய குடிமகன்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. கேஒய்சி சேவைகளை வழங்குபவர்கள் உட்பட பல பொது மற்றும் தனியார் அதிகாரிகளும் சேவைகளை வழங்குவதற்கு மக்களிடத்தில் ஆதார் அட்டையை தான் முக்கியமான அடையாள ஆவணமாக கேட்கின்றனர். இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒரு என்ஆர்ஐ ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க முடியுமா இல்லையா என்பது பற்றிய குழப்பம் பலரிடத்திலும் இருந்து வருகிறது. இந்திய பாஸ்போர்ட்டைக் கொண்ட என்ஆர்ஐ ஒருவர் எந்த ஆதார் மையத்திலிருந்தும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறியுள்ளது.
மேலும் படிக்க | மின் கட்டணத்தை பாதியாக குறைக்கலாம்..! சுலபமான வழியை தெரிந்து கொள்ளுங்கள்
ஒரு என்ஆர்ஐ ஆதார் அட்டையைப் பெற செய்யவேண்டியவை:
1) உங்கள் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
2) செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.
3) பதிவு படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும்.
4) என்ஆர்ஐ-கள் அவர்கள் மின்னஞ்சல் ஐடியைக் குறிப்பிட வேண்டும்.
5) என்ஆர்ஐ சேர்க்கைக்கான அறிவிப்பு சற்று வித்தியாசமானது.
6) உங்களை என்ஆர்ஐ ஆக பதிவு செய்ய உங்கள் ஆபரேட்டரிடம் கோர வேண்டும்.
7) அடையாளச் சான்றுக்கு, ஆபரேட்டரிடம் உங்கள் பாஸ்போர்ட்டைக் கொடுக்க வேண்டும்.
8) அடையாளச் சான்றுக்குப் பிறகு, பயோமெட்ரிக் செயல்முறையை முடிக்க வேண்டும்.
9) ஆபரேட்டரிடம் சமர்ப்பிக்கும் முன் திரையில் உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்க வேண்டும்.
10) 14 இலக்க பதிவு ஐடி, தேதி மற்றும் என்ரோல்மெண்ட் ரசீது அல்லது பதிவுச் சீட்டு சேமிக்க வேண்டும்.
உங்கள் செயல்முறை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டதா என்பதை myaadhaar.uidai.gov.in/CheckAadhaarStatus என்கிற முகவரியில் சரிபார்க்கலாம். உங்கள் முகவரி மற்றும் பிறந்த தேதியை சரிபார்ப்பதற்காக உங்கள் பாஸ்போர்ட்டுடன் கூடுதலாக மற்றொரு முறையான ஆவணம் அல்லது ஆவணங்களை வழங்க உங்களுக்கு ஆப்ஷன் உள்ளது.
மேலும் படிக்க | Budget 2023 Expectations: இந்த முறையில் 80C-ன் கீழ் வரி விலக்கு கிடைக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ