NRI பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி?

NRI PAN Card: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பான் கார்டு வேண்டுமென்றால், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது, அதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 21, 2023, 06:35 AM IST
  • பான்கார்டு இந்த டிஜிட்டல் யுகத்தில் மிக முக்கியமான ஆவணம்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியாவில் இருந்து வருமானம் வந்தால் பான் கார்டு அவசியம்
NRI பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி? title=

How To Apply NRI PAN Card: ரேசன் கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற ஆணவங்கள் இந்த டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொருவருக்கு அத்தியாவசியமாகிறது. இவற்றில் பெயர், முகவரி, தந்தை பெயர் உள்பட அனைத்தையும் சரியாக வைத்திருந்தால் மட்டுமே அரசு சார்ந்த சேவைகள் மட்டுமின்றி பல்வேறு விஷயங்களுக்கு பயன்படும். இதனால், இந்த ஆவணங்கள் குறித்து முழுமையாக அறிந்துகொள்வதும், அதனை காலகாலத்தில் புதுப்பிக்க வேண்டியதை அறிந்துகொள்வதும் கட்டாயமாகிறது. 

அந்த வகையில், இன்றைய டிஜிட்டல் யுகத்தில், பான் கார்டு மிக மிக முக்கியமானதாக உள்ளது. இந்திய குடிமக்கள் இது ஒரு முக்கியமான ஆவணமாகும். ஏனெனில் இது அனைத்து பண பரிவர்த்தனைகளுக்கும் தேவைப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியரான (NRI) ஒருவர், இந்தியாவில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அவரிடம் பான் கார்டு இருக்க வேண்டும். 

அதாவது, இந்தியாவில் வரி விதிக்கக்கூடிய வருமானம் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவருக்கு இருந்தால், அவர் பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் எப்படி பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க | ஆதார் கார்டில் முகவரி மாற்ற இந்த ஆணவம் இனி தேவையில்லை

NRI பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் முறை 

வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய குடியுரிமை பெற்றிருந்தால், படிவம் 49A-ஐ நிரப்ப வேண்டும்.

வேறொரு நாட்டின் குடியுரிமை கொண்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள், படிவம் 49AA ஐ நிரப்ப வேண்டும்.

பின்னர், UTIITSL மற்றும் NDSL இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் குறிப்பிட்ட படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும். 

படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உருவாக்கப்பட்ட 15 இலக்க எண்ணுடன் ஒப்புகை நகலையும் (Acknowledgment Copy) ஆவணங்களுடன் நியமிக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

இந்தியாவிற்குள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் வழங்கும் தகவல் தொடர்பு முகவரிக்கு ரூ. 107 கட்டணமாக வசூலிக்கப்படும். இந்தியாவிற்கு வெளியே விண்ணப்பக் கட்டணம் மற்றும் அதை அனுப்பும் கட்டணங்கள் உட்பட அனைத்தும் சேர்த்து ரூ. 989 வசூலிக்கப்படும். 

ஆன்லைன் விண்ணப்பங்கள் டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

ஒப்புகைப் படிவத்தில் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படங்கள் வழங்கப்பட வேண்டும்.
வசிக்கும் நாட்டில் உள்ள வங்கிக் கணக்கு ஸ்டேட்மண்ட் நகல்.

NRE வங்கி கணக்கு அறிக்கையின் நகல் சமர்பிக்க வேண்டும். அதில், கடந்த 6 மாதங்களில் குறைந்தது இரண்டு பரிவர்த்தனைகள் நடந்திருக்க வேண்டும். 

மேலும் படிக்க | 7th Pay Commission: பட்ஜெட்டுக்கு பின்னர் ஊழியர்களின் ஊதியத்தில் பம்பர் ஏற்றம், மாஸ் செய்தி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News