ரிசர்வ் வங்கியில் கொட்டிக் கிடக்கும் மக்களின் பணம்! உரிமைகோர உங்களிடம் ஆவணம் இருக்கா?
RBI Unclaimed Amount Update: உரிமை கோரப்படாமல் கிடக்கும் 78000 கோடி ரூபாய் பணம் எங்கே இருக்கிறது? ரிசர்வ் வங்கி விதிகள் என்ன சொல்கின்றன?
வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள உங்கள் பணத்தை நீங்கள் கவனமாக கையாளலாம். 50 ரூபாய் பிடித்தமானாலும் அதற்கான காரணத்தை தெரிந்துக் கொள்ளாமல் இருப்பு கொள்ளாது. ஆனால், நாட்டின் வங்கிகளில் .78,213 கோட ரூபாய் அளவில் டெபாசிட்களை யாரும் வாங்காமலேயே வைத்திருக்கின்றனர். நம்ப முடியாத ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்தப் பணத்திற்கு உரிமை கோர யாரும் முன்வரவே
வங்கிகளில் முடங்கும் பணம்
இந்த கோடிக்கணக்கான ரூபாய் வங்கிகளில் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. அதுமட்டுமல்ல, வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்திற்கு உரிமை கொண்டாடி, அதை கோருவதற்கு யாரும் இல்லை என்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வங்கிகளில் கேட்பாரற்று முடங்கிக் கிடக்கும் பணத்தின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
நாட்டின் பல்வேறு வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, அதற்கு உரிமை கோருபவர்கள் யாருமில்லை என்று கூறும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின்படி, மார்ச் 31, 2024 வரையில் வங்கிகளில் கோரப்படாத டெபாசிட்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் கோரப்படாதத் தொகை
ஆண்டுக்கு 26 சதவீதம் என்ற அடிப்படையில் அதிகரித்து தற்போது அந்தத் தொகை 78,213 கோடி என்ற அளவுக்கு அதிகரித்துவிட்டது. கடந்த ஆண்டு இந்த தொகை 62,225 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | சீனியர் சிட்டிசன்களிடம் இருந்து அரசு அதிக வருமான வரி ஈட்டுகிறதா? தெளிவான விளக்கம்!
பணம் எத்தனை ஆண்டுகளாக கோரப்படவில்லை?
கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வங்கிக் கணக்குகளிலும் 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக இருக்கும் இந்த கோரப்படாத தொகையை பல ஆண்டுகளாக யாரும் கேட்கவேயில்லை.இப்படி கோரப்படாதத் தொகையை, வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியின் ’வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு’ (Depositor Education and Awareness, DEA) நிதிக்கு மாற்றுகின்றன.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, கணக்கு வைத்திருப்பவரின் கணக்கில் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் உள்ள தொகையை யாரும் கோரவில்லை என்றாலோ அல்லது அந்த வங்கிக் கணக்கிலிருந்து 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அது கோரப்படாத தொகையாகக் கருதப்படும்.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பல வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகைகளுக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை. இப்படி பத்து ஆண்டுகளுக்கு அதிகமாக கோரப்படாத தொகை இருந்தால், அந்தத் தொகையை ரிசர்வ் வங்கியின் வைப்பாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு (DEA) நிதிக்கு வங்கிகள் மாற்றிவிடும்.
இந்த நிதியத்தில் இருக்கும் பணத்தை, சமூக அக்கறைக்காக ரிசர்வ் வங்கி செலவிடுகிறது. உங்களுக்குத் தெரிந்தவர்களின் பணம் பல ஆண்டுகளாக வங்கியில் உரிமை கோரப்படாமல் இருந்தால், நீங்கள் ரிசர்வ் வங்கி அல்லது சம்பந்தப்பட்ட வங்கியைத் தொடர்பு கொள்ளலாம். கோரப்படாத தொகை தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 Days 100 Pays என்ற பிரச்சாரத்தை ரிசர்வ் வங்கி தொடங்கியுள்ளது.
UDGAM என்ற போர்ட்டலில் இந்த கோரப்படாத தொகையை, தொடர்புடையவர்கள் உரிமைகோரலாம். உங்களுடைய பணம் வங்கியில் இருந்தது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் அனைத்து ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும்.
உங்கள் உறவினர் மற்றும் தொடர்புடையவர்களின் பணம் வங்கியில் கோரப்படாமல் இருந்தாலும், அது தொடர்பான ஆவணங்களை அளித்து பணத்துக்கு உரிமை கோரலாம்.உங்கள் உரிமைகோரல் சரியாக இருந்தால், இந்த கோரப்படாத தொகையை நீங்கள் கோரலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ