Unclaimed Amount In Banks: உரிமை கோரப்படாத டெபாசிட்களின் பட்டியலை வங்கிகள் தங்கள் இணையதளத்தில் வெளியிடுகின்றன. டெபாசிட் செய்பவர்கள் மற்றும் பயனாளிகள் அத்தகைய தரவுகளை அணுகுவதை எளிதாக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ஆன்லைன் தளத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது.நீண்ட நாட்களாக வங்கியில் இருக்கும் டெபாடிட் பணத்தை எடுக்க முடியாமல் அவதிப்படுபவர்களுக்கு இந்த செய்தி ஆசுவாசம் அளிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்களின் வசதிக்காக இந்திய ரிசர்வ் வங்கியால், மையப்படுத்தப்பட்ட வலை போர்டல் (UDGAM) தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாத மக்கள் அறிந்துக் கொள்வதே, இந்த போர்ட்டலைத் தொடங்குவதன் நோக்கமாகும். பொதுமக்களின் வசதிக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த போர்டல் மூலம், பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாத தொகையை எளிதாகக் கண்டறிய முடியும்.


ஒரே தளத்தில் பல வங்கிகளில் கோரப்படாத டெபாசிட்களை வாடிக்கையாளர்கள் தேடுவதற்கு வசதியாக ரிசர்வ் வங்கி இந்த தளத்தை உருவாக்கியுள்ளது. கோரப்படாத டெபாசிட்களின் பட்டியலை வங்கிகள் இணையதளத்தில் வெளியிடுகின்றன. இதன் மூலம், பயனரின் உள்ளீட்டின் அடிப்படையில், வெவ்வேறு வங்கிகளில் சாத்தியமான கோரப்படாத வைப்புகளைக் காணலாம்.


மேலும் படிக்க | சந்தையில் 2 வகையான ரூ.500 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்... அலர்ட் மக்களே!!


உத்கம் போர்டலில் பட்டியலிடப்படும் வங்கிகள்
ஏப்ரல் 2023 இல், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கோரப்படாத டெபாசிட்களைக் கண்காணிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட இணைய போர்ட்டலை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி), சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, தன்லக்ஷ்மி வங்கி லிமிடெட், சவுத் இந்தியன் வங்கி ஆகியவை தற்போது ரிசர்வ் வங்கியால் தொடங்கப்பட்ட இந்த போர்ட்டலில் உள்ளன. கோரப்படாத டெபாசிட்கள் பற்றிய தகவல்கள் சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட், இந்தியா லிமிடெட், டிபிஎஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கியில் கிடைக்கின்றன.


மற்ற வங்கிகளின் தகவல்களும் பதிவேற்றப்படும்
UDGAM போர்ட்டல் அறிமுகமானது, உரிமைகோரப்படாத சேமிப்புக் கணக்குகள் அல்லது FDகளை மக்கள் அடையாளம் காண உதவும். அத்தகைய நபர்கள் இதன் மூலம் டெபாசிட் தொகையை கோரலாம் அல்லது அந்தந்த வங்கிகளில் தங்கள் டெபாசிட் கணக்குகளை மறுதொடக்கம் செய்யலாம்.


ரிசர்வ் வங்கி அளித்த தகவலின்படி, தற்போது பயனர்கள் ஏழு வங்கிகளின் கோரப்படாத டெபாசிட்களின் விவரங்களை போர்ட்டலில் பெற முடியும். இது தவிர மற்ற வங்கிகள் தொடர்பான தகவல்களும் வரும் காலங்களில் படிப்படியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.


மேலும் படிக்க | எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்து கொள்ளலாம்


35,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத டெபாசிட்


பிப்ரவரி 2023 க்குள், பொதுத்துறை வங்கிகள் சுமார் 35,000 கோடி ரூபாய் உரிமை கோரப்படாத டெபாசிட்களை ரிசர்வ் வங்கிக்கு மாற்றியுள்ளன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். இந்தப் பணம் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இயங்காத அத்தகைய கணக்குடன் இணைக்கப்பட்டது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் தான், மிக அதிக அளவிலான உரிமை கோரப்படாத தொகை உள்ளது. அதன் மொத்த மதிப்பு ரூ.8,086 கோடிஆகும்.


இது தவிர, பிஎன்பியில் ரூ.5,340 கோடியும், கனரா வங்கியில் ரூ.4,558 கோடியும், பாங்க் ஆப் பரோடாவில் ரூ.3,904 கோடியும் உரிமை கோரப்படாமல் உள்ளது.


மேலும் படிக்க | ரூ.2000 நோட்டு பற்றி மற்றொரு முக்கிய செய்தி: சிக்கலை தவிர்க்க உடனே படிக்கவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ