சந்தையில் 2 வகையான ரூ.500 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்... அலர்ட் மக்களே!!

RBI on Rs. 500 Note: சமீபத்தில் 500 ரூபாய் நோட்டு தொடர்பான ஒரு செய்தி வைரலாக பரவியது. இது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.   

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 16, 2023, 11:36 AM IST
  • சந்தையில் 2 வகையான 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன.
  • வீடியோவில் கூறப்பட்டது என்ன?
  • வைரலாகும் செய்தியின் உண்மையைக் கண்டறியவும்.
சந்தையில் 2 வகையான ரூ.500 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய அப்டேட்... அலர்ட் மக்களே!! title=

இந்திய ரிசர்வ் வங்கி: சமீபத்தில் இந்திய அரசு 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் இருந்து நீக்கியது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, வெவ்வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தொடர்பாக பல வகையான செய்திகள் வெளிவருகின்றன. உங்களிடம் 500 ரூபாய் நோட்டு இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பெரிய செய்தியாகவும் முக்கியமான செய்தியாகவும் இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அரசால் மெற்கொள்ளப்பட்டது. மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இந்திய ரூபாய் மதிப்பு குறித்து பல்வேறு செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக சில நாட்களுக்கு முன்னர், 2000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது முதல், 500 ரூபாய் நோட்டு பற்றிய பல வதந்திகளும் செய்திகளும் பரவி வருகின்றன. எனினும், மக்கள் அதிகாரப்பூர்வ அமைப்புகளிலிருந்து வரும் அறிவிப்புகள் மற்றும் செய்திகளைத் தான் நம்ப வேண்டும் என்றும் ஆதாரமற்ற வதந்திகளை நம்பக்கூடாது என்றும் இந்திய அரசாங்கமும் இந்திய ரிசர்வ் வங்கியும் அவ்வப்போது மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி ரூ.500 நோட்டு குறித்து சில முக்கிய தகவல்களை அளித்துள்ளது. 

சந்தையில் 2 வகையான 500 ரூபாய் நோட்டுகள் உள்ளன

2 வகையான 500 நோட்டுகள் சந்தையில் கிடைக்கின்றன. இரண்டு நோட்டுகளுக்கும் இடையே மிகக் குறைந்த வித்தியாசம் உள்ளது. இந்த இரண்டு வகையான நோட்டுகளில் ஒன்று போலி என்று அழைக்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இரு வகைகளில் ஒரு வகை 500 ரூபாய் நோட்டு காட்டப்பட்டு அது போலியானது என அந்த வீடியோவில் கூறப்பட்டது. இது உண்மையா? உண்மையான நோட்டுகள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். 

வீடியோவில் கூறப்பட்டது என்ன?

ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பத்தின் வழியாகவோ அல்லது காந்திஜியின் படத்திற்கோ மிக அருகிலோ பச்சை நிறக் கீற்று இருந்தால் அந்த 500 ரூபாய் நோட்டை வாங்கக்கூடாது என வீடியோவில் கூறப்பட்டிருந்தது. இந்த வீடியோவில் இரு வகையான 500 ரூபாய் நோட்டுகளில் ஒரு வகையான நோட்டு போலியானது என வீடியோவில் கூறப்படுகிறது. PIB இந்த வீடியோவைப் பற்றிய உண்மைச் சோதனையை மேற்கொண்டது. அதன் பிறகு அதன் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விவரித்த PIB, இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று ட்வீட் செய்தது. மேலும் RBI ஒரு PDF ஐப் பகிர்ந்துள்ளது, இது சாதாரண குடிமகனுக்கு உண்மையான மற்றும் போலி ரூ.500 நோட்டுகளுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய உதவும்.

மேலும் படிக்க | எந்த வங்கி வாடிக்கையாளராக இருந்தாலும் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இதை செய்து கொள்ளலாம்

இரண்டு வகையான ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும்

அசல் காணொளியின் உண்மைச் சோதனைக்குப் பிறகு, இந்த வீடியோ முற்றிலும் போலியானது என்று தெரிய வந்துள்ளது. சந்தையில் புழக்கத்தில் இருக்கும் இரண்டு வகையான நோட்டுகளும் உண்மையானவை. உங்களிடம் 500 நோட்டு இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. இரண்டு வகையான நோட்டுகளும் செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வைரலாகும் செய்தியின் உண்மையைக் கண்டறியவும்

உங்களுக்கும் இதுபோன்ற செய்திகள் வந்தால், கவலைப்படவேண்டாம். இது போன்ற போலி செய்திகளை யாரிடமும் பகிர வேண்டாம். இது தவிர, எந்தச் செய்திக்கும் உண்மைச் சரிபார்ப்பும் செய்யலாம். இதற்கு https://factcheck.pib.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைதளத்திற்கு சென்று பார்க்க வேண்டும். இது தவிர, +918799711259 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது pibfactcheck@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும் நீங்கள் வீடியோவை அனுப்பி உண்மையை தெரிந்துகொள்ளலாம். 

மேலும் படிக்க | ரூ.2000 நோட்டு பற்றி மற்றொரு முக்கிய செய்தி: சிக்கலை தவிர்க்க உடனே படிக்கவும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News