சாலை பாதுகாப்பை மேம்படுத்த மோடி அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசாங்கம் விரைவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தை அமைக்க உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்திய அரசு அமைக்கவுள்ள தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் (National Road Safety Board) ஒரு ஆலோசனைக் அமைப்பாக செயல்படும். அதற்கான வரைவு நோடிபிகேஷனை  (draft notification) அரசு வெளியிட்டுள்ளது.


தேசிய சாலை பாதுகாப்பு வாரியத்தின்  அம்சங்கள் மற்றும் பொறுப்புகள்


  • சாலை பாதுகாப்பை (road safety) மேம்படுத்துவதற்கான, புதிய தொழில்நுட்பம் குறித்த ஆலோசனைகளை வழங்குதல்.

  • வாகன பாதுகாப்பு தொடர்பாக, மோசமான நிலையில் வாகனங்களை திரும்ப பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை நிர்ணயித்தல்.

  • பாதுகாப்பு உபகரணங்களுக்கான சரியான விலையை தீர்மானித்தல்

  • வாகன பதிவு மற்றும் உரிமங்களை வழங்குவதற்கான எளிய மற்றும் வெளிப்படையான விதிகளை அமைத்தல்


சாலை போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road transport) , இந்த வரைவு  திட்டம் குறித்து பொது மக்களும், சம்பந்தப்பட்டவர்களும். 30 நாட்களுக்குள் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கருத்துக்களை ஆலோசனைகளையும் ஆராய்ந்த பின்னர், தேசிய சாலை பாதுகாப்பு வாரியம் இறுதி நோடிபிகேஷனை வெளியிடும். இந்த வாரியத்தில், தலைவரை தவிர கூடுதலாக அதிகபட்சம் 7 உறுப்பினர்கள் இருப்பார்கள்.


புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இந்த வாரியம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மோட்டார் வாகனச் சட்டம் (Motor Vehicle Act), திருத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட ஒரு திருத்தம் சாலை விபத்துக்களை அதிக அளவில் குறைக்க குறைக்க வழிவகுத்தது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, 2020 மார்ச் மாதத்திற்குள்  சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது. இதன் மூலம் ஏற்படும்  உயிரிழப்புகள் 15,000 என்ற அளவிற்கு குறைந்துள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.


ALSO READ | கொரோனா நோயாளி வீடுகளுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டக்கூடாது: உச்ச நீதிமன்றம்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR