மத்திய பட்ஜெட் 2023: நாட்டில் இன்னும் சில நாட்களில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் ( பிப்ரவரி 1ஆம் தேதி)  தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு முன் மக்களுக்கு அரசிடமிருந்து சில எதிர்பார்ப்புகள் உள்ளன. மறுபுறம், இது மோடி அரசின் இந்த ஆட்சிக்காலத்தின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் இந்த முறை பட்ஜெட் மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். அந்தவகையில் மூன்று சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாகப் போராடி வரும் விவசாய சமூகத்தை திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உண்மையை மனதில் வைத்து, 2023-24க்கான மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெலாய்ட் இந்தியா நிறுவத்தின் அறிக்கையின்படி, இது நாட்டிற்கு $800 பில்லியனுக்கும் அதிகமான வருவாயையும், 2031க்குள் $270 பில்லியனுக்கும் அதிகமான முதலீட்டையும் ஈட்ட முடியும்.


மேலும் படிக்க | Budget 2023: தள்ளிப்போடப்பட்டதா வங்கி தனியார்மயமாக்கல்? காரணம் என்ன?


அதேபோல் வேளாண் துறையை நவீனமயமாக்கவும், வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப்களை ஊக்குவிக்கவும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஆதரிக்கும் கொள்கைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


மறுபுறம் தொழில்துறை அமைப்பான PHD சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்ட பட்ஜெட்டுக்கு முந்தைய குறிப்பில் கூறியதாவது, பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் துறையில் மேலும் சீர்திருத்தங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஏனெனில் இது உணவு பதப்படுத்தும் தொழில்முனைவோரின் அளவை அதிகரிக்க உதவும்.


இது உலகளாவிய விவசாயம் மற்றும் உணவு ஏற்றுமதியில் அதன் பங்களிப்பை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அதேபோல் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல் பொருட்களின் ஏற்றுமதியை 2021-22ல் 50 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து அடுத்த மூன்று ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ