இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல்வேறு துறையினர் பட்ஜெட் மீதான தங்களது எதிர்பார்ப்புகளையும் கோரிக்கைகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான எதிர்பார்ப்பு சற்று அதிகமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் தற்போதைய மோடி அரசின் கடைசி பட்ஜெட் இது என்பதால் இந்த பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மக்கள் நலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து இந்த பட்ஜெட் இருக்கும் என்று கருதப்படுகிறது.


மேலும் படிக்க | Budget 2023: வேளாண்துறைக்கான விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன? 


தொழில்நுட்பம் மற்றும் ஐடி துறை எதிர்பார்ப்புகள் என்ன?


உள்கட்டமைப்பு: இந்தியாவின் இன்ஃப்ராஸ்ட்ராக்சர் இன்னும் பல பிராந்தியங்களில் முழுமையாக வளர்ச்சியடையவில்லை. இது நிறுவனங்களுக்கு பெரும் தடையாக இருக்கும்.


டிஜிட்டல் பிளவு: இந்தியா ஒரு பெரிய டிஜிட்டல் பிளவு கொண்ட நாடு. தொழில்நுட்பம் மற்றும் விழிப்புணர்வு இரண்டிலும் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகள் பின்தங்கியுள்ளன.


டிஜிட்டல் வரிகள்: நிறுவனங்கள் மற்றும் SMBகள் ஆன்லைனில் செயல்படுவதை எளிதாக்க டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் இ-காமர்ஸ் தொடர்பான விதிமுறைகளை எளிதாக்க வேண்டும். வரிச்சுமைகளைக் குறைப்பதன் மூலமும், இ-இன்வாய்ஸிங்கை ஊக்குவிப்பதன் மூலமும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகளை அரசாங்கம் ஆதரிக்க முடியும்.


அறிவுசார் சொத்துரிமை சட்டங்களில் மாற்றங்கள்: மென்பொருள் மற்றும் பிற டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான வலுவான பாதுகாப்பு சட்டங்கள் புதுமைகளை ஊக்குவிக்க மற்றும் தொழில் முதலீடுகளை பாதுகாக்க வேண்டும்.


ஜிஎஸ்டியை எளிமையாக்குதல்: குறிப்பிட்ட சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதத்தை குறைப்பது, ஆர் & டியில் முதலீடுகளை அதிகரிக்க நிறுவனங்களை ஊக்குவிக்கும் மற்றும் அதிக போட்டித்தன்மையை ஏற்படுத்தும். நிறுவனங்கள் தங்கள் மென்பொருள் மேம்பாட்டுத் தேவைகளை இந்தியாவிடம் அவுட்சோர்ஸ் செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் தங்கள் சேவைகளை வழங்க முடியும் என்பதால் இது ஏற்றுமதியை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | Budget 2023: தள்ளிப்போடப்பட்டதா வங்கி தனியார்மயமாக்கல்? காரணம் என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ