நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிவேக சொகுசு ரயில்களான இவை, தமிழகத்தை பொறுத்தவரை, சென்னை சென்ட்ரல் - மைசூரு, சென்னை சென்ட்ரல் - கோவை, சென்னை சென்ட்ரல் - விஜயவாடா, கோவை - பெங்களூரு கன்டோன்மென்ட், சென்னை எழும்பூர் - திருநெல்வேலி ஆகிய வழித்தடங்களில் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டி அறிமுகம்


இந்நிலையில், நெடுந்தூர வழித்தடங்களுக்கான, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 2024 ஆம் ஆண்டிலிருந்து, வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று சென்ற வருடமே அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று பெங்களூருவில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் ஆலையில் ( Bharat Earth Movers Limited - BEML) தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டியின் வடிவமைப்பை, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அதனை அறிமுகப்படுத்தினார்.


வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவது எப்போது?


வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை தொடங்குவது குறித்து குறிப்பிட்ட அவர், 5 முதல் 6 மாத கால சோதனைக்கு பிறகு ரயில் சேவை தொடங்கப்படும் என தெரிவித்தார்.  பெங்களூரில் BEML தயாரித்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ப்ரோடோடைப் ரயில் பெட்டிகளை அறிமுகப்படுத்தி பேசிய அவர், "வந்தே பாரத் சேர் கார், நமோ-பாரத் (ரேபிட் ரயில் என்னும் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு), அம்ரித் பாரத் ரயில் (புஷ்-புல் தொழில்நுட்ப ரயில்கள்) ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து), அடுத்த முக்கிய நடவடிக்கையாக வந்தே பாரத் ஸ்லீப்பர் மற்றும் வந்தே மெட்ரோ அறிமுகம் ஆகும்" என்றார்.


மேலும் படிக்க | தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீர் ராஜினாமா... தள்ளிப்போகும் தேர்தல் அறிவிப்பு? - பின்னணி என்ன?


வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் தொழில்நுட்பம்


அதிக தூரம் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை பேருதவியாக இருக்கும். உலக தரம் வாய்ந்த அம்சங்களை கொண்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பயணிகளுக்கு ஒரு வசதியான பயணத்தை உறுதியளிக்கிறது. வந்தே பாரத், சேர் கார் வகை ரயில்களின் பயன்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பம் தான், ஸ்லீப்பர் லைல்களிலும் பயன்படுத்தப்படும். அதே போன்று சொகுசு பயணத்தை கொடுக்கும் இந்த ரயிலில், கூடுதலாக கழிப்பறைகள் மேம்பட்ட வசதியுடன் இருக்கும், மேம்பட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்படும்.


வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் பெட்டி தயாரிக்கும் செலவு


வளர்ந்த நாடுகளில், இதே போன்ற வசதியுடன் கூடிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் ஒரு பெட்டியை தயாரித்து இந்தியா கொண்டு வருவதற்கான செலவு ரூபாய் 10 கோடி. ஆனால், நாம் இந்தியாவிலேயே, தயாரிப்பதால், ஒரு வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பதற்காக ஆகும் செலவு ரூபாய் எட்டு முதல் ஒன்பது கோடியாக உள்ளது என்று அமைச்சர் அஷ்விணி  வைஷ்ணவ் தெரிவித்தார்.


முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை


டெல்லிக்கும் வாரணாசிக்கும் இடையிலான முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, 2019 பிப்ரவரி 15ம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியால் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் ‘மேக்-இன்-இந்தியா’ முயற்சியின் அடையாளமாகவும், இந்தியாவின் பொறியியல் திறமையையும் எடுத்துக்காட்டுகிறது என்றால் மிகையில்லை. முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தற்போது 60க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கையை விரிவாக்கும் செய்யும் முயற்சியில் இந்திய ரயில்வே மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 


மேலும் படிக்க  | ஜாபர் சாதிக் கொடுத்த வாக்குமூலம்... பல உண்மைகள் வெளியாகும்: என்சிபி அதிகாரி பரபரப்பு ப்ரெஸ் மீட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ