தனித்துவமான UPI-ATM: UPI (Unified Payments Interface) அப்ளிகேஷன் மூலம் செயல்படும் தனித்துவமான ATM இன் வீடியோவை வணிக அதிபர் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா X இயங்குதளத்தில் (ட்விட்டர்) பகிர்ந்துள்ளார் மற்றும் இந்த தொழில்நுட்பத்தை ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனந்த் மஹிந்திராவின் பதிவின்படி, UPI அடிப்படையிலான ஏடிஎம் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்டில் காட்சிப்படுத்தப்பட்டது. இது குறித்து ஆனந்த் மஹிந்திரா குழுமத்தின் தலைவர், 'செப்டம்பர் 5 ஆம் தேதி மும்பையில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2023 இல் UPI ATM அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா நிதிச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, கார்ப்பரேட் மையமாக இல்லாமல் நுகர்வோர் மையமாக (கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கான எச்சரிக்கை மணிகள்?) மாற்றும் வேகம் வியக்க வைக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.


மேலும் படிக்க | வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதி அமைச்சர்!



இந்தியாவின் முதல் UPI-ATM 
சமீபத்தில், இந்தியாவின் முதல் யுபிஐ-ஏடிஎம் நேற்று ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ் (Hitachi Payment Services) மூலம் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) உடன் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஒயிட் லேபிள் ஏடிஎம் (WLA) என தொடங்கப்பட்டது. இதன் மூலம், எந்தவித சிரமமும் இல்லாமல் பணத்தை வித்ட்ரா / எடுக்க முடியும். அதே நேரத்தில், ஏடிஎம் கார்டு எடுத்துச் செல்ல வேண்டிய தேவையும் முடிவுக்கு வந்துள்ளது. இது சில வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு ‘க்யூஆர் அடிப்படையிலான பணமில்லா பணம் எடுப்பதை’ அனுபவிக்க அனுமதிக்கும் அனுபவத்தை வழங்கும்.


UPI-ATM இல் பணத்தை எடுப்பது எப்படி?


* நீங்கள் எவ்வளவு பணம் எடுக்க வேண்டும் என்பதை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
* நீங்கள் தேர்ந்தெடுத்த தொகையுடன் இணைக்கப்பட்ட UPI QR குறியீடு காண்பிக்கப்படும்.
* QR குறியீட்டை ஸ்கேன் செய்ய உங்கள் UPI பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.
* பரிவர்த்தனையை உறுதிப்படுத்த உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.
இப்போது உங்கள் பணம் ATM இல் இருந்து வெளிவரும்.


UPI-ATM எப்படி வேலை செய்கிறது?
யுபிஐ-ஏடிஎம் சேவையானது இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ICCW) என்றும் அழைக்கப்படுகிறது. இது UPI ஐப் பயன்படுத்தும் வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஏடிஎம்மிலிருந்தும் (UPI-ATM செயல்பாட்டை ஆதரிக்கும்) ஃபிசிக்கல் கார்டு தேவையில்லாமல் பணம் எடுக்க வசதியான வழியை வழங்கும்.


ஒரே நேரத்தில் 10,000 ரூபாய் எடுக்க முடியும்
தற்போது நாடு முழுவதும் முன்னோடித் திட்டத்தின் கீழ் சுமார் 700 இயந்திரங்கள் நிறுவப்படும். வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனையில் 10,000 வரை பணத்தை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | RBI புதிய அதிரடி... கணக்கில் பணமே இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்தலாம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ