Unified Pension Scheme: மத்திய அரசு கடந்த ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்தது. தேசிய ஓய்வூதிய முறையை மாற்ற வேண்டும் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டு கொண்டுவர வேண்டும் என்றும் மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக கேட்டு வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு யுபிஎஸ் -ஐக் (UPS) கொண்டு வந்தது. இப்போது, சமீபத்தில் இது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன. UPS ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்


UPS தொடர்பாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உறுதி செய்யப்படும். சில நாட்களுக்கு முன்புதான், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் மாற்றங்களைச் செய்வதற்காக 8வது சம்பளக் குழுவை (8th Pay commission) அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான கோரிக்கை நீண்ட காலமாக ஊழியர் அமைப்புகளிடமிருந்து இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


National Pension System: தேசிய ஓய்வூதிய முறை


தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் UPS ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஏற்கனவே NPS இன் கீழ் இருந்து UPS இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்குப் பயனளிக்கும்.


UPS இன் கீழ் சில சூழ்நிலைகளில் மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


- ஒரு ஊழியர் 10 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். 
- அடிப்படை விதிகள் 56 இன் கீழ் அரசாங்கம் ஒருவருக்கு ஓய்வு அளித்தாலும், அவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும். 
- இந்த விதிகளில், மத்திய அரசு ஊழியர்களின் பணி ஓய்வு தொடர்பான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
- 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஒருவர் தன்னார்வ ஓய்வு பெற்றால், அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும். ஆனால், இப்படிப்பட்ட வழக்குகளில், ஊழியர் உண்மையாக ஓய்வு பெற வேண்டிய தேதியிலிருந்து ஓய்வூதியம் வழங்கப்படும்.


UPS: இந்த ஓய்வூதியத் திட்டத்தின் முக்கிய நன்மைகள் என்ன?


- UPS இன் கீழ், மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது ஒரு நிலையான தொகையைப் பெறுகிறார்கள். 
- இந்தத் திட்டத்திலிருந்து வெளியேறுவதும் ஊழியரின் கைகளில்தான் உள்ளது. அவர்கள் நினைத்தால், திட்டத்திலிருந்து வெளியேறலாம். 
- இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் சேவை காலத்திற்கு ஏற்ப வழங்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- யுபிஎஸ் -இல், ஊழியர் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியில் இருந்திருந்தால் மட்டுமே முழு ஓய்வூதியம் கிடைக்கும். 
- ஓய்வு பெறுவதற்கு முந்தைய 12 மாதங்களில் பெறப்பட்ட சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும்,.
- பணியாளரின் சேவை காலம் குறைவாக இருந்தால் அல்லது அவர் தானாக முன்வந்து ஓய்வு பெற்றால், அந்த விகிதத்தில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
- உதாரணமாக, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றிய பிறகு, மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் உறுதி செய்யப்படுகிறது. 
- குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு தன்னார்வ பணி ஓய்வு பெறப்பட்டால், சாதாரண பணி ஓய்வு துவங்கும் தேதியின் படி ஓய்வூதியம் வழங்கப்படும்.


Dearness Allowance, Dearness Relief:  UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணம் கிடைக்குமா?


ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும். பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியைப் போலவே, அது கணக்கிடப்படும் விதத்தில் அகவிலைப்படி நிவாரணமும் முடிவு செய்யப்படும். ஓய்வூதியம் வரத் தொடங்கும் போதுதான் இந்த அகவிலைப்படி நிவாரணம் கிடைக்கும்.


மொத்தத் தொகையும் கிடைக்கும்


UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களுக்கு மொத்தமாக ஒரு தொகையும் கிடைக்கும். இது அவர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளம் மற்றும் 6 மாதங்களுக்கு ஒரு முறை வரும் அகவிலைப்படியில் 10% ஆகியவற்றை இணைத்து இணைத்து கணக்கிடப்படும். ஊழியர்கள் ஓய்வு பெறும்போது இந்த மொத்த தொகையை பெறுவார்கள். 


மேலும் படிக்க | Budget 2025: 7 மடங்குக்கு மேல் அதிகரிக்கும் மாத ஓய்வூதியம், பட்ஜெட்டில் முக்கிய EPFO அறிவிப்பு


மேலும் படிக்க | Budget 2025: புதிய வரி முறையில் வரி விலக்குகள்... நடுத்தர வர்க்கத்தினருக்கு காத்திருக்கும் குட் நியூஸ்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ