Unified Pension Scheme: மத்திய அரசு ஒரு புதிய ஓய்வூதிய முறையாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்தியுள்ளது. இது ஏப்ரல் 2025 முதல் அமலுக்கு வரும். மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக தேசிய ஓய்வூதிய முறையை விடுத்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு யுபிஎஸ் என்ற ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய ஓய்வுதிய திட்டம் மற்றும் தேசிய ஓய்வூதிய முறை என இரண்டிலும் உள்ள முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து, ஒருங்கிணைந்த ஓய்வூதிய முறை அமைக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் அனைவருக்கும் உடன்பாடு இல்லை. இதன் கணக்கீட்டு சூத்திரம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான பலனைத் தருவதாக ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். ஓய்வுதிய முறைகளுக்கு இடையில் உள்ள வித்தியாசத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.


Old Pension Scheme: பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS)


ஓய்வூதியக் கணக்கீடு


- ஓய்வூதியம் = கடைசியாக பெறப்பட்ட அடிப்படை சம்பளத்தில் 50%
- ஒரு ஊழியர் MACP  (Modified Assured Career Progression) அல்லது சம்பள உயர்வு பெற்றிருந்தால், அதன் முழு தாக்கமும் ஓய்வூதியத்தில் இருக்கும், அதாவது அதற்கு ஏற்ப ஓய்வூதிய தொகை மாறுபடும்.
- கடைசி மாதத்தில் MACP பெறப்பட்டாலும், ஊழியர் தனது புதிய அடிப்படை சம்பளத்தில் 50% ஓய்வூதியத்தைப் பெறுவார்.


Unified Pension Scheme: ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS)


- ஓய்வூதியம் = கடந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை சம்பளத்தில் 50%
- ஒரு ஊழியர் ஆண்டின் நடுப்பகுதியில் MACP அல்லது சம்பள உயர்வு பெற்றிருந்தால், அதன் தாக்கம் குறைவாக இருக்கும். ஏனெனில் சராசரி அடிப்படை ஊதியத்தில் சம்பள உயர்வுக்கு முந்தைய சம்பளமும் சேர்க்கப்படும்.


ஒரு உதாரணத்தின் மூலம் ஓய்வூதிய கணக்கீட்டை புரிந்துகொள்ளலாம்.


OPS Pension Calculation: பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய கணக்கீடு


 - கடைசியாக பெற்ற அடிப்படை சம்பளம்: ரூ.60,000
- ஓய்வூதியம்: ரூ.60,000 × 50% = ரூ.30,000


UPS Pension Calculation: ஒருங்கினைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய கணக்கீடு


ஒரு ஊழியர் MACP-க்கு முன்பு 9 மாதங்களுக்கு ரூ.50,000 அடிப்படை ஊதியம் பெற்று வந்தார் என்றும், MACP-க்குப் பிறகு அது ரூ.60,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் வைத்துக்கொள்வோம்.


- MACPக்கு முன்: ரூ.50,000 (9 மாதங்கள்)
- MACP-க்குப் பிறகு: ரூ.60,000 (3 மாதங்கள்)
- சராசரி அடிப்படை சம்பளம்: (50,000×9)+(60,000×3)/12=ரூ.52,500
- ஓய்வூதியம்: ரூ.52,500 × 50% = ரூ.26,250


இரு ஓய்வூதிய முறைகளுக்கும் இடையிலான வித்தியாசம்: ரூ.30,000 (OPS) – ரூ.26,250 (UPS) = ரூ.3,750 குறைவு (தோராயமாக 11% வித்தியாசம்)


பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பலவீனமாக்கும் முக்கிய அம்சங்கள்


MACP மற்றும் ஊதிய உயர்வின் தாக்கம் குறைவாக இருப்பது


- UPS-ல், ஓய்வூதிய கணக்கீட்டிற்கு, கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களின் சராசரி அடிப்படை ஊதியம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதன் காரணமாக கடைசி ஆண்டில் சம்பள உயர்வு கிடைத்தால், அதன் முழுப் பலனும் ஓய்வூதிய கணக்கோட்டில் கிடைக்காது.


- OPS-ல், கடைசி சம்பளத்தில் 50% நேரடியாக ஓய்வூதியமாக கிடைக்கிறது. இதன் மூலம் MACP-யின் முழுப் பலனையும் ஓய்வூதியத்தில் பெற முடிகிறது.


ஊதிய உயர்வு கிடைக்கும் நேரத்திற்கு அதிக முக்கியத்துவம்


- ஆண்டின் தொடக்கத்தில் MACP அல்லது சம்பள உயர்வு கிடைத்தால், சராசரி அடிப்படை ஊதியம் அதிகமாக இருக்கும். இது ஓய்வூதியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, அதிக ஓய்வூதியம் கிடைக்க வழிவகுக்கும்.


- ஆனால் ஆண்டின் கடைசி மாதங்களில் MACP அல்லது ஊதிய உயர்வு கிடைத்தால், அதன் தாக்கம் குறைவாகவே இருக்கும்.


நீண்ட சேவைக்குப் பிறகும் பெரிய பலன்கள் கிடைப்பதில்லை


- தங்கள் பணியின் கடைசி ஆண்டுகளில் MACP அல்லது ஊதிய உயர்வுக்கு தகுதியுடைய ஊழியர்கள் UPS -இல் ஒப்பீட்டளவில் குறைந்த ஓய்வூதியத்தையே பெறுவார்கள்.


UPS vs OPS: ஓபிஎஸ் vs யுபிஎஸ்


இப்படிப்பட்ட பல காரணங்களால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS), பழைய ஓய்வூதியத் திட்டத்தை விட குறைவான நன்மைகளே கிடைக்கின்றன. குறிப்பாக தங்கள் சேவையின் முடிவில் MACP அல்லது பெரிய சம்பள உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு இது குறைந்த பலன்களையே அளிக்கின்றது. எனினும், கடைசி பணி ஆண்டில் எந்த வித உயர்வும் பெறாதவர்களுக்கு பெரிய வித்தியாசம் இருக்க வாய்ப்பில்லை. ஆண்டின் இறுதியில் MACP அல்லது ஊதிய உயர்வு பெறும் ஊழியர்களுக்கு UPS இன் கீழ் கிடைக்கும் ஓய்வூதியம் கணிசமாகக் குறையக்கூடும். அதாவது, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) முழுமையான மாற்றாக கருத முடியாது. மாறாக இதில் சில முக்கியமான குறைபாடுகள் இருப்பதே உண்மை.


மேலும் படிக்க | SBI FD Plans: எஸ்பிஐ வழங்கும் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள்... லட்சாதிபதி ஆவது ஈஸி தான்


மேலும் படிக்க | EPF உறுப்பினர்களுக்கு நல்ல செய்தி: விதிகளில் மாற்றன், சுலபமாகும் செயல்பாடுகள், விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ