Vehicle Scrapping Policy : பழைய 4 சக்கர வாகனம் (கார்) மற்றும் டூவீலர்ஸ் (ஸ்கூட்டர், பைக்) ஆகியவற்றிற்கான பழைய வாகனங்களை மாற்றுவதற்கான கொள்கையை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், (Finance Minister Nirmala Sitharaman) பட்ஜெட்டை சமர்பிக்கும் போது இந்த கொள்கை குறித்து குறிப்பிட்டுள்ளார்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காற்று மாசடைவதை (Environment-Friendly) தவிர்க்கும் வகையில், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை அகற்ற, மத்திய அரசு இந்த திட்டத்தை கொண்டு வருகிறது. பழைய வாகனங்களை ஒப்படைத்து, புதிய வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகைகள் வழங்க  இந்த புதிய திட்டம் வகை செய்யும். இது தன்னார்வ அடிப்படையிலான தொட்டமாக இருக்கும்.


சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர் திரு.கிரிதர் ராணே வாகன ஸ்கிராப்பிங் கொள்கை தொடர்பான ஊக்க திட்டத்தை அரசு விரைவில் அறிவிக்கும் என்று கூறினார்.  இது திடர்பாக சமபந்தபட்ட துறைகளிடம் அரசு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால், மந்த நிலையையும் சரிவையும் எதிர்கொள்ளும், ஆட்டோமொபைல் துறை மேம்படுவதோடு,  நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் தரும் என்று நம்பப்படுகிறது. 


புதிய வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும் போது ஆட்டோமொபைல் துறை ஏற்றம் காணும். வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனங்கள் 30 சதவீதம் வரை மலிவாக கிடைக்கும். பழைய வாகனங்கள்  அகற்றப்படுவதால், காற்று மாசுபாடு 25 சதவீதம் குறையும். அதே நேரத்தில், ஸ்கிராப் மையங்களில், அதாவது பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் மையங்களில் பெரிய அளவில் வேலைவாய்ப்பும் கிடைக்கும்.


இந்தக் கொள்கையின் மூலம், நாட்டில் வாகனத்தை பிரித்து அப்புறப்படுத்தும் மையங்கள் பெரிய அளவில் கட்டப்படும். இது அதிக எண்ணிக்கையில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும். அதே நேரத்தில், மறுசுழற்சியில் எஃகு, அலுமினியம், பிளாஸ்டிக் போன்ற பாகங்களை ஆட்டோமொபைல் துறை மலிவாகப் பெற முடியும்.


தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், ஸ்கிராப் கொள்கை, பொருளாதாரத்திற்கு ஒரு உயிர்நாடியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.


ALSO READ | பாகிஸ்தான் காலிஸ்தான் தொடர்புள்ள 1178 டுவிட்டர் கணக்குகளை முடக்கவும்: மத்திய அரசு