Vi Recharge Plan: தற்போது Dream 11 IPL 2020 தொடர் நடைபெற்று வருகிறது. மொபைல் போன்களில் ஐபிஎல் போட்டிகளின் நேரடி ஸ்ட்ரீமிங்கைப் பார்க்கும் பயனர்கள் அதிக தரவுகளையும், அதனுடன் சேர்த்து பல நன்மைகளையும் வழங்கும் திட்டங்களைத் தேடுகிறார்கள். நீங்கள் ஒரு வோடபோன் ஐடியா (Vodafone Idea) பயனராக இருந்தால், ரூ .450 க்கும் குறைவான விலையில் 200GB க்கும் அதிகமான தரவை உங்களுக்கு வழங்கக்கூடிய ப்ரீபெய்ட் திட்டத்தை நீங்களே தேடுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அத்தகைய ஒரு Vi Plan திட்டத்தின் விலை, நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் பற்றிய தகவல்களை உங்களுக்கு தருகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Vi 449 திட்டம்:
449 ரூபாயில் கிடைக்கும் இந்த Vi Prepaid திட்டத்தின் மூலம், வோடபோன் ஐடியா பயனருக்கு ஒவ்வொரு நாளும் 4 ஜிபி அதிவேக தரவு கிடைக்கும். ஆனால் அதே நேரத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் என மற்ற நெட்வொர்க்கிலும் வழங்கப்படுகின்றன.


இந்த வோடபோன் திட்டத்தின் மூலம், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது, ஆனால் இரட்டை தரவு (Double Data Offer) சலுகையின் கீழ், இந்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு நாளும் 2 ஜிபி கூடுதல் தரவு பயனருக்கு வழங்கப்படுகிறது.


ALSO READ |  Jio Vs Vi: அட்டகாசமான ஒர்க் பிரேம் ஹோம் திட்டத்தை அறிவித்த Vodafone


இந்த திட்டம் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு?
449 ரூபாயின் இந்த Vi திட்டம் 56 நாட்கள் செல்லுபடியாகும். அதாவது நீங்கள் மொத்தம் 224 ஜிபி அதிவேக தரவைப் பெறுவீர்கள் (56 நாட்கள் * ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவு = 224 ஜிபி). இந்தத் திட்டத்துடன் மற்ற பிற சலுகைகளும் கிடைக்கின்றன. எம்.பி.எல் (MPL) இல் உங்களுக்கு பிடித்த விளையாட்டை விளையாடுவதற்கு ரூ .125 மதிப்புள்ள திட்டம் இல்வாசமாக வழங்கப்படுகிறது. அதேபோல ஒவ்வொரு நாளும் சோமாடோவில் உணவு ஆர்டர் செய்வதற்கு 75 ரூபாய் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.


சமீபத்தில் Vi (Vodafone Idea) சில ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அவை ஒரு வருடத்திற்கு இலவச ஜீ 5 (ZEE 5) அணுகலை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் என்ன, இந்த திட்டங்களுடன் என்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன, நீங்கள் அறிய ஆர்வமாக இருந்தால், நமது Zee Hindustan Tamil தளத்தில் இணைந்திருப்பதன் மூலம் முழு செய்திகளையும் வாசிக்கலாம்.


ALSO READ |  Vodafone-Idea திட்டம்: ரூ. 300-க்கும் குறைவான விலையில் 112GB தரவு மற்றும் Free Call 


Vi நீண்ட கால திட்டங்கள் பட்டியல்:
வோடபோன் ஐடியா அல்லது தற்போதைய MyVi.in இணையதளத்தில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளபடி 1.2 பில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள பயனர்களைக் கொண்டுள்ளது. முன்பே பணத்தை சேமிப்பதை உறுதிசெய்ய நீண்ட கால செல்லுபடியாகும் Vi திட்டங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். அதைப்பற்றி அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR