இந்த வங்கியில் உங்கள் கணக்கு இருக்கிறதா? அக்டோபருக்குள் இந்த வேலையை செய்யவும்!
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கிடைக்காது என்று வங்கி கூறியது. இது இந்தியன் வங்கியின் அறிவிப்பு. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உங்கள் வங்கிக் கணக்கு இந்தியன் வங்கியில் இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்கு முக்கியம். அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட்ட பிறகு, பல விஷயங்களில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன. சில விஷயங்களை செய்து முடிக்க கால வரையறையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே உங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்காவிட்டால், பின்னர் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். சில வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொள்ளுமாறு வங்கி வாடிக்கையாளர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு செக் புக் தொடர்பான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. பழைய காசோலை புத்தகத்தை பயன்படுத்தும் நபர்கள் விரைவில் புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். வாடிக்கையாளர்கள் புதிய காசோலை புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் செய்தி வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 1 க்கு பிறகு, யாராவது பழைய செக் புக் பயன்படுத்தினால், பணம் கொடுக்கப்படமாட்டாது என்று வங்கி கூறியது. எனவே, வாடிக்கையாளர்கள் விரைவில் ஒரு புதிய காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அலகாபாத் வங்கியின் MICR குறியீடு மற்றும் காசோலை புத்தகங்கள் அக்டோபர் 1 முதல் செயல்படாது என்று இந்தியன் வங்கி தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் அருகிலுள்ள கிளையிலிருந்து காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கவும். இது தவிர, நீங்கள் இணைய வங்கி அல்லது மொபைல் வங்கி மூலம் ஆன்லைனில் செக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம். எந்தவித தொந்தரவும் இல்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை அனுபவிக்க உடனடியாக இதைச் செய்யுங்கள்.
Also Read | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம், அதிரடி முடிவெடுத்த அரசாங்கம்
ஜூன் காலாண்டில் இந்தியன் வங்கி மிகப்பெரிய லாபம் ஈட்டியது
அலகாபாத் வங்கி 1 ஏப்ரல் 2020 முதல் இந்தியன் வங்கியுடன் இணைந்துள்ளது. அதையடுத்து, அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்தியன் வங்கியின் வாடிக்கையாளர்களாக யாக மாற்றப்பட்டனர். எனவே ஒரே விதமான காசோலை பயன்பாட்டை கொண்டுவருவதற்காக இந்தியன் வங்கி வாடிக்கையளர்கள் புது காசோலை புத்தகத்தை துரிதமாக வாங்க அறிவுறுத்தியிருக்கிறது.
அலகாபாத் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய வங்கியின் செக் புக் வைத்திருந்ததால், இந்தியன் வங்கி பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது வங்கி அக்டோபர் 1 முதல் பழைய காசோலை புத்தகத்தை மூடுவதாக அறிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் இந்தியன் வங்கி அபரிமிதமான லாபம் ஈட்டியுள்ளது. வங்கியின் லாபம் 220 சதவீதம் அதிகரித்து 1,182 கோடியாக அதிகரித்துள்ளது.
Also Read | இன்று முதல் பெரிய மாற்றங்கள்: ATM, டெபிட், கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் மாற்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR