Warning: போலி IT Refund செய்திகள் பற்றி எச்சரித்தது வருமான வரித் துறை
வரி செலுத்துவோர் ரீஃபண்டின் பெயரில் வரும் இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
Income Tax Refund: வருமான வரி தாக்கல் செய்த உடனேயே ரீஃபண்ட் கிடைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் பெரும்பாலும் மோசடிக்கு ஆளாகின்றனர். இணையக் குற்றங்களின் வளர்ந்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரீஃபண்டு பற்றி வரும் செய்தி அல்லது மின்னஞ்சலைத் திறக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இது உங்கள் கணக்கை ஹேக் செய்யக்கூடிய செய்தியாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ITR தாக்கல் செய்த பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பலர் இணைய மோசடிக்கு பலியாகிறார்கள். ரீஃபண்ட் பெறுவதற்கான அவசரத்தில் அவர்கள் செய்யும் சில வேலைகளால், ரீஃபண்ட் என்னவோ கிடைப்பதில்லை, ஆனால் வங்கிக் கணக்கு காலியாகி விடுகிறது. இதுபோன்ற மோசடி குறித்து வருமான வரித்துறை வரி செலுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
போலி செய்திகளிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்
வருமான வரி (Income Tax) ரீஃபண்ட் என்ற பெயரில் வரும் அனைத்து செய்திகளிலிருந்தும் விலகி இருக்கும்படி வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. வரி செலுத்துவோர் ரீஃபண்டின் பெயரில் வரும் இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. ஏனெனில் இதுபோன்ற மோசடி செய்திகள் வரி செலுத்துவோருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். வருமான வரித் துறை ட்வீட் மூலம் இந்த தகவலை வழங்கியுள்ளது.
ரீஃபண்ட் என்ற பெயரில் வரும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம்.
வருமான வரித் துறை (Income Tax Department) தனது ட்வீட்டில், “வரி செலுத்துவோர் ஜாக்கிரதை! பண ரீஃபண்டிற்கு உறுதியளிக்கும் போலி இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம். இந்த செய்திகளை வருமான வரித்துறை அனுப்பவில்லை. எந்தவொரு செயல்முறையையும் உங்கள் மின்-தாக்கல் கணக்கில் சென்றே செய்யுங்கள். மின்னஞ்சல் / இணைப்பு / படிவத்தில் ஒருபோதும் எதையும் செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளது.
ALSO READ: Budget Mobile App: பட்ஜெட் ஆவணங்களை எளிதாக அணுக இதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும்
இப்படிப்பட்ட மோசடி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. ITR தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி நெருங்கி வரும் போது இதுபோன்ற மோசடிக்காரர்கள் செயலில் இறங்கி, வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறையின் பெயரில் ஒரு செய்தியை அனுப்பி, பணத்தை ரீஃபண்ட் செய்வதாகக் கூறுகின்றனர். வரி செலுத்துவோருக்கு ஒரு இணைப்பு அனுப்பப்படுகிறது.
இதன் மூலம் அவர்களின் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்து வங்கி விவரங்களைச் சமர்ப்பித்தால், உங்கள் வங்கி கணக்கு ஹேக் செய்யப்பட்டு கணக்கு காலியாகிவிடும்.
வருமான வரித் துறை இந்த தகவல்களைக் கேட்பதில்லை
வருமான வரித்துறை தனது ட்வீட்டில், தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் இணைப்பை அளித்துள்ளது. இதில் வரி செலுத்துவோர் புகார் அளிக்க முடியும். போலி ரீஃபண்ட் பற்றி வரும் மின்னஞ்சல் மற்றும் போலி வலைத்தளத்தை அடையாளம் காண முடியும். வருமான வரித்துறை ஒருபோதும் வரி செலுத்துவோரிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை மின்னஞ்சல் மூலம் கேட்காது. அத்துடன், வரி செலுத்துவோரின் பின், கடவுச்சொற்கள் அல்லது கிரெடிட் கார்டுகள் (Credit Card), வங்கிகள் மற்றும் பிற நிதிக் கணக்குகள் பற்றிய தகவல்களை மின்னஞ்சல் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை ஒருபோதும் கேட்காது.
உடனடியாக இங்கே புகார் செய்யவும்
உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் மின்னஞ்சல் அல்லது செய்தி வந்தால், நீங்கள் அந்த மின்னஞ்சலை webmanager@incometax.gov.in க்கு அனுப்பலாம் அல்லது அதை iincident@cert-in.org.in க்கும் அனுப்பலாம். இது ஒரு சைபர் மோசடி. இதைப் பற்றி உடனடியாக புகார் செய்யப்பட வேண்டும்.
ALSO READ: Budget 2021: வருமானம் உள்ளதோ இல்லையோ, நீங்கள் இந்த வரியை செலுத்திதான் ஆக வேண்டும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR