கொரோனா வைரஸ் தொற்று மற்றும் லாக்டவுன்  காரணமாக, இந்திய ரிசர்வ் வங்கி ( RBI) 6 மாதங்களுக்கு கடன் தவணை சலுகையை வழங்கியது. வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியவர்களுக்கு இது நிவாரணம் அளித்தது. அதன் சலுகை காலம் இப்போது முடிந்துவிட்டது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடன் தவணை சலுகை முடிந்த நிலையில், இப்போது கடன் வாங்கியவர்கள் இந்த மாதத்திலிருந்து இ.எம்.ஐ (EMI) செலுத்த வேண்டும். கடன் தொகையை அவர்கள் எவ்வாறு திருப்பிச்செலுத்துவதற்கான வழிகள் என்ன என்பதை அறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு பல வழிகள் உள்ளன.  நிலுவையில் உள்ள இஎம் ஐ தொகையை தவணை செலுத்த வேண்டிய வங்களிடமே கடனாக வாங்கி,  செலுத்தி விட்டு, அதற்கான இஎம் ஐ தொகையை தற்போதுள்ள இஎம் ஐ தொகையுடன் சேர்த்து செலுத்தலாம். அப்படி கடன் வாங்கி இ.எம்.ஐ. தொகையை அதிகரிக்க விருப்பம் இல்லை என்றால், கடன் வாங்கியவர்கள் கடனை தவணை காலத்தை நீட்டித்து கொள்ளலாம்.


கடன் மறுசீரமைப்பு


கடன்களை திருப்பிச் செலுத்துவதில் நிவாரணம் வழங்க கடன் மறுசீரமைப்பு திட்டத்தை வங்கிகள் தயாரித்து வருகின்றன. இதற்கு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் ஒப்புதலைப் பெற வேண்டும். இதில், நிலுவையில் உள்ள கடன் தொகையை மாற்ற அமைக்க  பல வகையான வசதிகள் வழங்கப்படும். கடன் வாங்குபவர்களும் தங்களுக்கு ஏற்ற வகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon  வழங்கும் அற்புத வாய்ப்பு..!!! 


ஒரு நேரத்தில் திருப்பிச் செலுத்தும் முறை


கடன் வாங்கியவருக்கு போதுமான தொகை இருந்தால், நிலுவையில் உள்ள EMI தொகையை அவர் ஒரே நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியும். இதற்குப் பிறகு, அவர்கள் முன்பு போலவே EMI ஐ வழங்க முடியும். ஒரு முறை செலுத்தி விட்டால், அவர்கள் அதிக ஈ.எம்.ஐ செலுத்த வேண்டியதில்லை.


மேலும் படிக்க | உங்கள் மகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் Post Office இன் இந்த திட்டம்....