ITR தாக்கலில் மறக்கக்கூடாத 6 விதிகள்: மறந்தால் வீடு தேடி வரும் வருமான வரி நோட்டீஸ்
Income Tax Notice: வருமான வரித்துறையால் உருவாக்கப்பட்ட விதிகளை வரி செலுத்துவோர் புறக்கணித்தால் அல்லது ITR ஐ நிரப்புவதில் ஏதேனும் தவறு செய்தால், வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
Income Tax Notice: நாட்டில் உள்ள மக்களின் நிதி நடவடிக்கைகளை வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது. வருமான வரித்துறையிடம் வரி செலுத்தும் அனைவரது நிதித் தகவலும் இருக்கின்றது. வரி செலுத்தும் ஒவ்வொரு நபரும் ஐடிஆர் நிரப்புவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வருமான வரித்துறை ஐடிஆர் தொடர்பாக பல விதிகளை வகுத்துள்ளது. வருமான வரித்துறையால் உருவாக்கப்பட்ட இந்த விதிகளை வரி செலுத்துவோர் புறக்கணித்தால் அல்லது ITR ஐ நிரப்புவதில் ஏதேனும் தவறு செய்தால், வரித் துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஐடிஆர் தாக்கல்
வருமான வரி கணக்கு தாக்கல் நடந்து வருகிறது. இதை தாக்கல் செய்யும்போது நீங்கள் ஈட்டிய பணம், செய்யப்பட்ட முதலீடுகள் ஆகியவற்றை பற்றி தெரிவிக்க வேண்டும். நீங்கள் வரி விலக்கு பெற விரும்பினால், உங்கள் முதலீடுகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க வேண்டும். நீங்கள் ஏதேனும் பெரிய பரிவர்த்தனை செய்தால், அதைப் பற்றியும் கவனமாக இருக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய பரிவர்த்தனை வேண்டுமானாலும் செய்யலாம், அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் கண்டிப்பாக இது குறித்த தகவலை வரிக் கணக்கில் தெரிவிக்க வேண்டும்.
ஆகையால், வருமான வரிக் கணக்கை தாக்கல் (ITR Filing) செய்யும் நபர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். வரி தாக்கல் செய்யும் நபர்கள் தவறுதலாக கூட செய்யக்கூடாத தவறுகள் பற்றியும், எந்தெந்த சூழ்நிலைகளில் வருமான வரித்துறை மூலம் உங்களுக்கு நோட்டீஸ் வரக்கூடும் என்பதையும் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
கொடுக்கப்பட்ட தகவல் சரியாக பொருந்தவில்லை என்றால் (If the given information does not match correctly)
உங்களின் மொத்த வருமானமும், ஐடிஆரில் நீங்கள் கொடுத்த வருமானத் தகவலும் பொருந்தவில்லை என்றால், வருமான வரித் துறையிலிருந்து உங்களுக்கு நோட்டீஸ் வரலாம். அத்தகைய சூழ்நிலையில், ITR இல் மொத்த வருமானம், சொத்துக்கள் மற்றும் பிற விஷயங்களைப் பற்றிய சரியான தகவலை நீங்கள் வழங்க வேண்டும்.
வருமானம் மற்றும் பரிவர்த்தனைகளுக்கு இடையே வேறுபாடு இருந்தால் (In case of difference between income and transactions)
ஏதேனும் ஒரு காரணத்தால் உங்கள் வருமானம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, வரித்துறை (Income Tax Department) உங்களிடமிருந்து தகவல்களைக் கேட்கலாம். இந்த காரணத்திற்காக, நீங்கள் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்யும்போதோ அல்லது ஏதேனும் ஒரு சொத்தில் அதிக பணத்தை முதலீடு செய்யும்போதோ, கண்டிப்பாக இந்த தகவலை ITR இல் கொடுக்கவும்.
வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்தல் (Late filing of tax return)
யாரேனும் சரியான நேரத்தில் வருமான வரிக் கணக்கை தாக்கல் (ITR Return Filing) செய்யவில்லை என்றால், அவருக்கு ஐடி சட்டத்தின் 142(1)(i) பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டு அபராதமும் விதிக்கப்படலாம்.
சரியான வருமான வரித் தகவல்களைத் தராவிட்டால் (For not giving correct income tax information)
வரிக் கணக்குகள் வருமான வரித் துறையால் மதிப்பிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய சூழ்நிலையில், வருமான வரி குறித்த சரியான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றால், பிரிவு 147 இன் கீழ் வரி செலுத்துபவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் (Income Tax Notice) அனுப்பலாம்.
மேலும் படிக்க | Union Budget 2024: இந்த ஊழியர்களுக்கு வரும் ஜாக்பாட் அறிவிப்புகள், 17% ஊதிய ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ