Tax Slab வரம்பிற்குள் வராவிட்டாலும் ஐடிஆர் தாக்கல் செய்யலாம்: ஏராளமான நன்மைகள் இருக்கு
Income Tax Return: வருமான வரியை தாக்கல் செய்வதால், எதிர்காலத்தில், நீங்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம். மேலும் இதன் காரணமாக பல கடினமான பணிகளையும் சுலபமாக செய்து விட முடியும்.
Income Tax Return: பணம் ஈட்டும் அனைவரும் வரி செலுத்தும் வரம்பிற்குள் வருவதில்லை. வரி வரம்புக்குள் வராததால் வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் ஏராளம். ஆனால், வரி வரம்புக்குள் வரவில்லையென்றாலும், வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில், வருமான வரியை தாக்கல் செய்வதால், எதிர்காலத்தில், நீங்கள் அதிலிருந்து பல நன்மைகளைப் பெறலாம். மேலும் இதன் காரணமாக பல கடினமான பணிகளையும் சுலபமாக செய்து விட முடியும். உங்கள் கடினமான பணிகளும் எளிதாகச் செய்யப்படும். வருமான வரி தாக்கல் செய்வதால் கிடைக்கும் 5 பெரிய நன்மைகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
கடன் வாங்குவது எளிதாகிவிடும்
இன்றைய காலக்கட்டத்தில் வீடு, நிலம், கார் வாங்க அல்லது தொழில் தொடங்குவதற்காக பெரும்பாலானோர் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கும்போது, உங்கள் வருமானத்திற்கான ஆதாரம் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், வேலையில் இருப்பவர்கள் நிறுவனத்தின் சம்பளச் சீட்டைக் காட்டலாம், ஆனால் வேலை செய்யாதவர்கள் வருமானச் சான்றிதழை எவ்வாறு வழங்குவார்கள்? இது போன்ற சந்தர்ப்பங்களில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளின் வருமான வரிக் கணக்கின் நகல் இருந்தால், கடன் பெறுவது எளிதாகிறது. வருமான வரி அறிக்கை (ITR) என்பது ஒரு நபரின் வருமானத்திற்கான உறுதியான ஆதாரமாகும்.
மேலும் படிக்க | PPF: திடமான வருமானம், அற்புதமான வட்டி.... பணத்தை பன்மடங்காக்கும் அசத்தலான திட்டம்
விசாவிற்கு ITR அவசியம்
நீங்கள் வேறொரு நாட்டிற்குச் செல்லும்போது, விசா பெற வேண்டும். பல நாடுகளின் விசா அதிகாரிகள் விசா வழங்கும் செயல்பாட்டில் வருமான வரி அறிக்கையின் (Income Tax Return) நகலைக் கேட்கிறார்கள். ஐடிஆர் மூலம், தனது நாட்டுக்கு வருபவர் அல்லது வர விரும்புபவரின் நிதி நிலை என்ன என்பது சரிபார்க்கப்படுகிறது. சொந்தமாக சம்பாதிக்காதவர்கள், அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஐடிஆர் நகலை வழங்கலாம்.
பெரிய தொகைகளுக்கான காப்பீட்டு பாலிசிகளுக்கு
ரூ.50 லட்சம் அல்லது ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள காப்பீட்டு பாலிசியை ஒருவர் வாங்கும்போது, ஐடிஆர் ரசீதைக் காட்ட வேண்டும். எல்ஐசியில், குறிப்பாக ரூ.50 லட்சம் அல்லது அதற்கு மேல் டேர்ம் பாலிசி எடுத்தால், ஐடிஆர் ஆவணங்கள் கேட்கப்படும். இவ்வளவு பெரிய தொகைக்கு நீங்கள் காப்பீடு செய்ய தகுதியுடையவரா இல்லையா என்பதை இது தீர்மானிக்கிறது.
தொழில் தொடங்க உதவும்
நீங்கள் ஏதேனும் ஒரு அரசாங்கத் துறையிலிருந்து ஒப்பந்தத்தைப் பெற விரும்பும் வணிகத்தைத் தொடங்கினால், அதற்கு ஐடிஆர் தாக்கல் செய்வது மிகவும் முக்கியம். எந்தவொரு அரசுத் துறையிலும் ஒப்பந்தம் எடுப்பதற்கும் கடந்த 5 ஆண்டுகளின் ஐடிஆர் அவசியமாகும்.
முகவரிச் சான்றாகவும் விளங்கும் ஐடிஆர்
இது வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலம். ஆனால், வருமான வரி கணக்கை மேனுவல் முறையில் தாக்கல் செய்தால், பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ரசீது அனுப்பப்படும். இதன் காரணமாக இது ஒரு முகவரி சான்றாகவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆகையால் ஐடிஆர் வருமானத்துடன் முகவரியின் சான்றாகவும் பயன்படுகிறது.
மேலும் படிக்க | RBI Monetary Policy:ஜூன் 7 ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏற்படுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ