திருமணத்திற்கு பணம் தேவைப்பட்டால் கவலையை விடுங்க: PF கணக்கில் ஈசியா எடுக்கலாம்
EPFO Withdrawal Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPFO சில சந்தர்ப்பங்களில் சில குறிப்பிட்ட தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
EPFO Withdrawal Rules: ஒரு நபர் பணிபுரியத் தொடங்கியவுடன், அவருடைய சம்பளத்தில் ஒரு பகுதி அவருடைய இபிஎஃப் கணக்கில் (EPF Account) சேரத் தொடங்குகிறது. இந்த பணத்தை நீண்ட காலம் முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு பெறும்போது வட்டியுடன் ஒரு பெரிய தொகை திரும்பக் கிடைக்கிறது. பிஎஃப் உறுப்பினர்களுக்கு இதனுடன் இன்னும் பல வசதிகளும் கிடைக்கின்றன. பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் பணத்திற்கு பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO வட்டியும் அளிக்கின்றது.
பொதுவாக கணக்கில் சேர்ந்திருக்கும் இபிஎஃப் தொகை (EPF Amount) பணி ஓய்வுக்கு பிறகு எடுக்கப்படுகிறது. எனினும், சில நேரங்களில் ஒரு நபருக்கு சில அவசர அல்லது எதிர்பாராத தேவைகளுக்காக ஓய்வுக்கு முன்னரே பணம் தேவைப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அதாவது EPFO சில சந்தர்ப்பங்களில் சில குறிப்பிட்ட தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.
EPFO விதிகளின்படி, பணியாளர் வருங்கால வைப்பு நிதியை மூன்று சூழ்நிலைகளில் எடுக்கலாம், அதாவது வித்ட்ரா செய்யலாம்:
- பணியாளர் 58 வயதை நிறைவு செய்தால், அவர் தனது பணத்தை வட்டியுடன் திரும்பப் பெறுவார்.
- ஒருவருக்கு அவர் செய்யும் வேலை போய், அவர் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கலாம்.
- பணியாளர் ஓய்வு பெறும் வயதிற்கு முன்பே துரதிஷ்டவசமாக இறந்துவிட்டால், பிஎஃப் பணத்தை அவரது குடும்பம் எடுக்கலாம்.
இந்த சூழ்நிலைகளைத் தவிர, பிஎஃப் உறுப்பினர்கள் (PF Members) தங்களது சில முக்கிய தேவைகளுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம். அவற்றில் ஒரு தேவை திருமணம். ஆனால், இதற்கும் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம்
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் விதிகளின்படி, சம்பளம் பெறும் இபிஎஃப் சந்தாதார்ரகள் (EPF Subscribers) குடும்பத்தில் நடக்கும் திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இதற்கு சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். சில நிபந்தனைகளின் கீழ் திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை எடுக்க முடியும்.
பிஎஃப் கணக்கை தொடங்கி எவ்வளவு காலம் கழித்து PF பணத்தை எடுக்க முடியும்?
பிஎஃப் பணத்தை எடுக்க, குறைந்தபட்சம் 7 வருட சேவையை நிறைவு செய்திருக்க வேண்டியது அவசியமாகும்.
திருமணத்திற்கு பிஎஃப் -இலிருந்து எவ்வளவு தொகையை எடுக்க முடியும்?
சம்பளம் பெறும் நபர்கள் திருமணத்துக்காக பிஎஃப் கணக்கிலிருந்து பணம் எடுக்கும்போது மொத்த தொகையையும் எடுக்க முடியாது. விதிகளின் படி, திருமண செலவுகளுக்காக பணம் எடுப்பவர்கள் PF இலிருந்து வட்டியுடன் சேர்ந்து தங்களது பங்களிப்பில் 50% மட்டுமே எடுக்க முடியும்.
யாருடைய திருமணத்திற்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம்
ஒரு நபர் தனது சொந்த திருமண செலவுக்காக PF பணத்தை எடுக்கலாம். இருப்பினும், அந்த நபரின் வீட்டில் உடன்பிறப்புகள் அல்லது குழந்தைகளின் திருமணம் நடந்தால் அந்த திருமணத்திற்காகவும் பகுதியளவு பணத்தை எடுக்கும் வசதி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ