நம்மில் பலருக்கு சொந்தமாக கார் வாங்குவது ஒரு கனவு. வெகுசிலரே மொத்தமாக பணத்தை செலுத்தி கார் வாங்கும் நிலையில் இருப்பார்கள். பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினர், கார் வாங்க கடன் உதவியை பெறுவார்கள். பட்ஜெட் பற்றாக்குறையால், பலர் கார் கடனைத் தேர்வு செய்கிறார்கள். நிறுவனங்கள் கார் கடன் வாங்கும் செயல்முறையையும் மிகவும் எளிதாக்கியுள்ளன. உங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பார்த்த பிறகு வங்கிகள் கார் கடனை எளிதாகச் செயல்படுத்தும். ஆனால் கார் கடன் வாங்கும் முன், எதிர்காலத்தில் நிதி நெருக்கடியை சந்திக்காமல் இருக்க பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. வட்டி விகிதம் மற்றும் EMI


கார் கடன் வாங்குவதற்கு முன், சந்தையில் வெவ்வேறு கடன் வழங்குபவர்கள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். வெவ்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஒப்பிடுவதன் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கார் கடனைக் கண்டறியவும். குறைந்த வட்டி விகிதம் உள்ள வங்கியில் கடன் வாங்குவதால், ஆயிரக்கணக்கான பணத்தை மிச்சப்படுத்தலாம்.  மேலும், நீங்கள் அதிக கடன் தொகைக்கு தகுதியானவர் என்பதால் அதிக கடன் வாங்காதீர்கள். மேலும் கடனுக்காக பதிவு செய்வதற்கு முன் EMI எவ்வளவு செலுத்த வேண்டியிருக்கும் என்பதை மதிப்பீடு செய்யவும்.


2. கிரெடிட் ஸ்கோர்


உங்கள் கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் மட்டுமே எந்த வங்கியும் உங்களுக்கு கடன் தருகிறது. உங்கள் கடந்தகால கட்டணங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். நீங்கள் கடனை திரும்ப செலுத்துவதில் தாமதம் செய்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை நேரடியாக பாதிக்கும். அதே போன்று, வீட்டிற்கான மின்சார கட்டணம் போன்ற பிற கட்டணங்களையும் சரியான் நேரத்தில் செலுத்த வேண்டும். உங்கள் கிரெடிட் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வங்கி உங்களுக்கு கடன் தராது. எனவே, கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், உங்கள் கிரெடிட் ஸ்கோரை ஒருமுறை சரிபார்க்கவும். மேலும், கிரெடிட் ஸ்கோர் சிறப்பாக இருந்தால், குறைந்த வட்டியில் கடன் கொடுக்க பல வங்கிகள் முன் வருகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க | IMPS New Service: பணம் அனுப்புவது சுலபமானது... 5 லட்சம் வரை அனுப்ப இனி இதை செய்ய வேண்டாம்


3. கடன் காலம்


நீங்கள் கடன் வாங்கும்போது, ​​உங்களுக்கு ஒரு காலக்கெடு வழங்கப்படுகிறது. அந்தக் காலக்கெடுவுக்குள் மட்டுமே உங்கள் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். கடனைத் திருப்பிச் செலுத்த வங்கி உங்களுக்கு எவ்வளவு கால அவகாசம் அளிக்கிறது என்பதை நீங்கள் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். பல சமயங்களில் கடன் காலம் நீண்டது மற்றும் குறைந்த தவணைகளை செலுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கடனை விட அதிக பணம் செலுத்துவதும் சாத்தியமாகும். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப கடன் காலத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.


4. மற்ற கட்டணங்கள்


கடன் தொகை மற்றும் வட்டியுடன், வங்கி பல்வேறு வகையான கட்டணங்களையும் வசூலிக்கிறது. விண்ணப்பக் கட்டணம், தொடக்கக் கட்டணம் மற்றும் முன்கூட்டியே செலுத்தும் அபராதம் போன்ற பல கட்டணங்கள் இதில் அடங்கும். இந்தக் கட்டணங்களைப் பற்றி நீங்கள் கவனமாகப் படிக்க வேண்டும். சில நேரங்களில் இந்த கட்டணம் மிக அதிகமாக இருக்கும். முதலில், வங்கியில் இருந்து அனைத்து தகவல்களையும் பெறுங்கள், பின்னர் மட்டுமே எந்த ஆவணத்திலும் கையெழுத்திடுங்கள். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.


5. கடன் பெற தேவையான ஆவணங்கள்


கடன் பெற தேவையான ஆவணங்கள் என்பது கடனை கொடுக்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்றாலும், அவை பொதுவாக வயது மற்றும் அடையாளச் சான்று, வருமானச் சான்று மற்றும் முகவரிச் சான்று போன்றவை தேவைப்படும். இவற்றைப் பற்றிய முழுமையான தெளிவைப் பெறவும், செயல்முறையைத் துரிதப்படுத்த தேவையான ஆவணங்களை முன்கூட்டியே ஏற்பாடு செய்துக் கொள்ளவும்.


மேலும் படிக்க | RBI 5 புதிய சிபில் விதிகள்: குஷியில் கஸ்டமர்ஸ்... வங்கிகளுக்கு இனி அதிக வேலை!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ