RBI New Bank Locker Rules: புதிய வங்கி லாக்கர் விதிகளில் இந்திய ரிசர்வ் வங்கி பல மாற்றங்களைச் செய்துள்ளது. புதிய விதியின்படி, ஒரு நபர் தனது பொருட்களை வங்கி லாக்கரில் வைத்திருந்து, அது சேதமடைந்தால், நஷ்டஈட்டைச் செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். இந்த விதிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி லாக்கர் விதிகள்: 


இன்றைய டிஜிட்டல் யுகத்தில் (Digital Transaction) வீட்டிலும், வெளியே செல்லும் போதும் மக்கள் மிக குறைந்த அளவிலேயே ரொக்க பணத்தை தங்களுடன் எடுத்துச்செல்கிறார்கள். பலர் ஆன்லைனில் கட்டணங்களை செலுத்துகிறார்கள். கடைகளிலும் அப்படியே பொருட்களை வாங்குகிறார்கள். இந்த வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதில் வங்கி பெரும் பங்கு வகிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வங்கியில் கணக்கு இருக்கும். ஆனால் அந்த அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தக்கூடிய விதிகள் ஆர்பிஐ (RBI) ஆல் தீர்மானிக்கப்படுகின்றன.


வங்கி லாக்கர் (Bank Locker) அமைப்பு தொடர்பாக ரிசர்வ் வங்கி சில நாட்களுக்கு முன்பு அத்தகைய ஒரு விதியை உருவாக்கியது. இதற்கான விதி ஏற்கனவே இருந்தது, அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. நீங்களும் வங்கி லாக்கர் வசதியை பயன்படுத்தும் நபராக இருந்தால், இந்த புதிய விதியைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். 


ரிசர்வ் வங்கியின் விதி என்ன?


ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) புதிய வங்கி லாக்கர் விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதியின்படி, ஒருவர் தனது பொருட்களை வங்கி லாக்கரில் வைத்திருந்து, அது சேதமடைந்தால், நஷ்டஈடு செலுத்துவது வங்கியின் பொறுப்பாகும். லாக்கரின் வருடாந்திர வாடகையை வாடிக்கையாளருக்கு 100 மடங்கு செலுத்த வங்கி கடமைப்பட்டிருக்கும். அதே சமயம் வங்கியில் தீ விபத்து, கொள்ளை அல்லது வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அதனால் ஏற்படும் நஷ்டத்தை வாடிக்கையாளருக்கு வங்கியே ஈடு செய்யும்.


மேலும் படிக்க | OfflinePay: HDFCயின் ‘ஆஃப்லைன் சில்லறை கட்டணங்களை’ ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கிறது


வங்கியில் லாக்கர் வசதியை பெறுவது எப்படி?


ஒரு நபர் வங்கியில் லாக்கர் (Locker) வசதியைய் பெற விரும்பினால், முதலில் தான் லாக்கரைத் திறக்க விரும்பும் கிளைக்குச் செல்ல வேண்டும். இது அவரது அருகிலுள்ள கிளைகளில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம். பின்னர் அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த கிளையில் கொடுக்க வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் லாக்கர் வாடிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்படுகிற்து. விண்ணப்பித்த பிறகு, வங்கியின் காத்திருப்பு பட்டியலில் அந்த நபரின் பெயர் தோன்றினால், வரிசையில் உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் அவருக்கு லாக்கர் வசதி வழங்கப்படும். லாக்கர் வசதியை பயன்படுத்த ஆண்டு அடிப்படையில் குறிப்பிட்ட வாடகை வசூலிக்கப்படுகிறது.


RBI Locker Rules: லாக்கரில் அனுமதிக்கப்பட்ட பொருட்கள்


எஸ்பிஐ (SBI) இணையதளத்தின்படி, வங்கி லாக்கரின் திருத்தப்பட்ட விதிகளின்படி, வங்கி லாக்கரை சரியான நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்த முடியும். உதாரணமாக நகைகள், ஆவணங்கள் போன்றவற்றை வாடிக்கையாளர்கள் வைக்கலாம். 


RBI Locker Rules: வங்கி லாக்கரில் அனுமத்திக்கப்படாத பொருட்கள்


ரொக்க பணத்தை, ரூபாய் நோட்டுகளை வைத்திருக்க லாக்கரை பயன்படுத்த முடியாது. பிஎன்பி -இன் திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தின்படி, ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதைப்பொருட்கள் அல்லது தடைசெய்யப்பட்ட பொருட்களை வங்கி லாக்கரில் வைக்க முடியாது. மேலும், உருகும் அல்லது கதிரியக்க பொருட்களையும் எந்தவிதமான சட்டவிரோதமான பொருட்களையும் லாக்கரில் வைத்திருக்க முடியாது. வங்கி அல்லது அதன் வாடிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்தவொரு பொருளையும் லாக்கரில் வைக்கக்கூடாது. "ரசாயனங்கள், ஆயுதங்கள், வெடிபொருட்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் பிற ஆபத்தான, சட்டவிரோதமான பொருட்களை பாதுகாக்கப்பட்ட வங்கி லாக்கர்களில் வைக்க அனுமதி இல்லை." என  பிஎன்பி லாக்கர் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | ஜம்மு & காஷ்மீர் டூர் போக ப்ளானா.. இந்த அழகான இடங்களை மிஸ் பண்ணாதீங்க..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ