Paytm Deadline March 15: காலக்கெடுவுக்கு பிறகும் வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவைகள் கிடைக்கும்
Paytm Payments Bank Deadline: Paytm Payments Bank மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். தங்கள் பணம் என்னவாகும்? பரிவர்த்தனைகள் எவ்வாறு நடக்கும்? என பல கேள்விகளும் அச்சங்களும் எழுந்தன.
Paytm Payments Bank Deadline: இந்திய ரிசர்வ் வங்கி, 15 மார்ச் 2024க்குப் பிறகு புதிய டெபாசிட்கள் அல்லது டாப்-அப்களை ஏற்க பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு தடை விதித்துள்ளது. விதிகளுக்கு இணங்காத சில செயல்பாடுகளும், முறையற்ற சில நடவடிக்கைகளும் கண்டறியப்பட்டதன் பேரில், ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி மீது இந்த நடவடிக்கைகளை எடுத்தது. முன்னர் பிப்ரவரி 29 ஆக இருந்த காலக்கெடு அதன் பின்னர் மார்ச் 15, 2024 வரை நீட்டிக்கப்பட்டது.
Paytm Payments Bank மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். தங்கள் பணம் என்னவாகும்? பரிவர்த்தனைகள் எவ்வாறு நடக்கும்? என பல கேள்விகளும் அச்சங்களும் எழுந்தன. இதை கருத்தில் கொண்டு பிப்ரவரி 16, 2024 அன்று Paytm பேமெண்ட்ஸ் வங்கியில் விதிக்கப்பட்டுள்ள வரம்புகள் பற்றிய விரிவான தகவல்களை பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு (Paytm Customers) வழங்க ரிசர்வ் வங்கி, அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்க்கான விளக்கங்களை (FAQs) வெளியிட்டது.
Paytm Payments Bank: மார்ச் 15 காலக்கெடு
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ஆர்பிஐ (RBI) அளித்துள்ள காலக்கெடு இன்னும் 3 நாட்களில் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த காலக்கெடுவுக்கு பிறகு, பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு எந்தெந்த சேவைகள் தொடர்ந்து கிடைக்கும் என்பதில் இன்னும் குழப்பம் உள்ளது. அது பற்றி ரிசர்வ் வங்கி அளித்துள்ள விரிவான தகவலை பற்றி இங்கே காணலாம்.
- பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் ரீஃபண்ட் பெறுதல் (Getting Refund in Paytm Payments Bank):
மார்ச் 15க்குப் பிறகும், பேடிஎம் பயனர்கள் ரீஃபண்டுகள், கேஷ்பேக்குகள், பார்ட்னர் வங்கிகளிடமிருந்து ஸ்வீப்-இன்கள் அல்லது அவர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்ட வட்டி ஆகியவற்றை பெற முடியும்.
- ஃபாஸ்டேக் பயன்பாடு (Paytm Payments Bank FASTag Usage):
கணக்கில் இருப்பு இருக்கும் வரை, டோல்களில் கட்டணம் செலுத்த பயனர்கள் தங்கள் FASTag -ஐப் பயன்படுத்தலாம். எனினும், மார்ச் 15க்குப் பிறகு டாப் அப்கள் அனுமதிக்கப்படாது.
- பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாலட் தொகை (Paytm Payments Bank Wallet Money):
வாலட்டில் இருப்பு இருக்கும் வரை, பயனர்கள் அதை பயன்படுத்தலாம், தொகையை எடுக்கலாம் அல்லது மற்றொரு வாலட் அல்லது வங்கிக் கணக்கிற்கு நிதியைப் மாற்றலாம்.
- காலக்கெடுவிற்குப் பிறகு வாலட்டில் உள்ள கேஷ்பேக் என்ன ஆகும் (What Will Happen to Cashback due in wallet after deadline):
மார்ச் 15க்குப் பிறகும் ரீஃபண்டுகளும், கேஷ்பேக்குகளும் கிரெடிட் ஆகும். பணத்தைத் திரும்பப்பெறுதல் மற்றும் கேஷ்பேக்குகள் கிரெடிட் செய்ய முடியும். Paytm பேமெண்ட்ஸ் வங்கியைத் தொடர்புகொண்டு, வாடிக்கையாளர்கள் தங்கள் வாலட்டை க்ளோஸ் செய்து, அதில் உள்ள தொகையை வேறொரு வங்கியில் வைத்திருக்கும் கணக்கிற்கு மாற்றிக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட்டில் பணம் போட திட்டமா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!
- பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எப்படி எடுப்பது? (How To Withdraw money from Paytm Payments Bank)
மார்ச் 15க்குப் பிறகும், பயனர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை எடுக்கலாம், பயன்படுத்தலாம், தங்கள் கணக்கிலிருந்து பிற கணக்குகளுக்கு பணத்தை மாற்றலாம்.
-மாதாந்திர மின்சார கட்டணம் செலுத்தல் (Paytm Payments Bank Monthly Electricity Bill Deduction):
உங்கள் கணக்கில் இன்னும் பணம் இருந்தால், வித்டிரா, டெபிட் பணிகள் (National Automated Clearing House (NACH) ஆணைகள் போன்றவை) தொடர்ந்து நடக்கும், ஆனால் கிரெடிட்டுகள் மற்றும் வைப்புகளுக்கு அனுமதி இருக்காது.
-OTT சந்தா தானாக மாதந்தோறும் செலுத்தப்படும் (OTT Subscription Through Paytm Payments Bank):
வித்டிரா அல்லது டெபிட் மேண்டேட் போன்ற தேசிய தானியங்கு கிளியரிங் ஹவுஸ் (NACH) மேண்டேட்டுகள் உங்கள் கணக்கில் பணம் உள்ளவரை செயலில் இருக்கும். இதில் ஓடிடி சந்தாவும் அடங்கும். இருப்பினும், மார்ச் 15, 2024க்குப் பிறகு, உங்கள் கணக்குகளில் கிரெடிட்கள் அல்லது டெபாசிட்கள் அனுமதிக்கப்படாது.
-தானியங்கி EMI கொடுப்பனவுகள் (Automatic EMI Payments):
உங்கள் கணக்கில் இருப்பு இருக்கும் வரை டெபிட் மேண்டேட்கள் தொடரும். தொகை எப்பொழுதும் போல தானாக கழிக்கப்படும். இருப்பினும், கிரெடிட்கள் அல்லது டெபாசிட்கள் எதுவும் அனுமதிக்கப்படாது என்பதால், மற்றொரு வங்கியில் EMI பேமெண்ட்டுகளை அமைப்பதற்கான மாற்று முறைகளை நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ