போச்சா!!! GPay, PhonePe பயனர்களுக்கு அதிர்ச்சி: இனி UPI பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம்!!

UPI Transaction: பொது மக்களும் வணிகர்களும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் UPI ஐப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. யுபிஐ நிறுவனங்கள் இதற்கும் இப்போது கட்டணம் வசூலிக்கத் தயாராகி வருகின்றன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 12, 2024, 10:50 AM IST
  • அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை.
  • UPI பரிமாற்றத்திற்கும் இனி கட்டணம்?
  • யுபிஐ -க்கு கட்டணம் விதிக்கப்பட்டால் 70 சதவீத பயன்பாடு குறையும்.
போச்சா!!! GPay, PhonePe பயனர்களுக்கு அதிர்ச்சி: இனி UPI பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம்!! title=

UPI Transaction: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இன்னும் சில நாட்களில் UPI மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படலாம் என்ற அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது. இது குறித்து யுபிஐ நிறுவனங்கள் தீவிரமாக யோசித்து வருகின்றன. இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம். 

Paytm மீது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) கடுமையான நடவடிக்கைகளை எடுத்த பின்னர், யுபிஐ நிறுவனங்களின் செயல்முறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. UPI பயனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதுவரை இந்த சேவை இலவசமாக இருந்தது. எனினும், UPI கொண்டு செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. தங்கள் வருவாய் பற்றிய கவலை நிறுவனங்களை பற்றிக்கொண்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

அதிகரிக்கும் டிஜிட்டல் பரிவர்த்தனை

டிஜிட்டல் இந்தியா, கொரோனா பெருந்தோற்று, பணமதிப்பிழப்பு ஆகியவற்றுக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (Digital Transactions) அதிகரித்துள்ளன. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மீதான மோகமும் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த முறை பாதுகாப்பானதாகவும், எளிதாகவும் இருக்கின்றது. பணத்தை ஞாபகமாக எடுத்துச்செல்ல வேண்டாம், எடுத்துச்செல்லும் பணத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை வேண்டாம். இப்படி பல வசதிகளை டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நமக்கு அளிக்கின்றன. 5 ரூபாய்க்கு பக்கத்து கடையில் ஒரு மிட்டாய் வாங்கினாலும், பெரிய அங்காடிகளில் ஆயிரக்கணக்க்கில் துணி, நகை வாகினாலும், மக்கள் இன்றைய காலத்தில் UPI பேமெண்ட் மூலம் எளிதாக பணம் செலுத்துகிறார்கள். குறிப்பாக, சில்லறை பணத்திற்கான தேவை, அதற்கான டென்ஷனை நீக்கி, பணம் செலுத்தும் முறையை UPI எளிதாக்கியுள்ளது. 

டெபிட், கிரெடிட் கார்டுகளில் இல்லாத மிகப்பெரிய நன்மை
 
டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டுகளுடன் ஒப்பிடும்போது, யுபிஐ -க்கு மக்கள் மத்தியில் மோகம் சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இது இலவசம் என்பது!! பொது மக்களும் வணிகர்களும் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் UPI ஐப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் இப்போது ஒரு அதிர்ச்சி செய்தி வந்துகொண்டு இருக்கின்றது. யுபிஐ நிறுவனங்கள் இதற்கும் இப்போது கட்டணம் வசூலிக்கத் தயாராகி வருகின்றன. 

UPI பரிமாற்றத்திற்கும் இனி கட்டணம்? 

போன்பே (PhonePe), கூகுள் பே (Google Pay) ஆகியவை UPI துறையில் ஆதிக்கம் செலுத்தும் கட்டண செயலிகளாக உள்ளன. Paytm மீது ஆர்பிஐ (RBI) காட்டிய கண்டிப்புக்குப் பிறகு, இந்த செயலிகளின் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதுவரை UPI சேவைகள் இலவசமாக இருந்து வந்தன. ஆனால் இப்போது நிறுவனங்கள் இதற்கு கட்டணம் வசூலிக்க தயாராகி வருகின்றன. ஃபின்டெக் நிறுவனங்கள் தங்கள் வருவாயைப் பற்றிய கவலையில் உள்ளதாகவும், இதனால், நிறுவனங்கள் UPI பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்க விரும்புகின்றன என்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நீண்ட கால நிலைத்தன்மைக்கு, வணிகர் தள்ளுபடி விகிதத்துடன் (Merchant Discount Rate) அதாவது எம்டிஆர் (MDR) கூடிய கிரெடிட் கார்டு போன்ற அமைப்பு தேவை என்று நிறுவனங்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க | பிக்சட் டெபாசிட்டில் பணம் போட திட்டமா? இந்த பாதிப்புகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!

தற்போது யுபிஐ -இல் பூஜ்ஜிய எம்டிஆர் (Zero MDR) உள்ளது. இது தங்கள் வணிக மாதிரிகளை பாதிப்பதாக ஃபின்டெக் நிறுவனங்கள் (Fintech Companies) கவலையில் உள்ளன. நிறுவனங்கள் NPCI உடன் இது குறித்து விவாதித்துள்ளன. இருப்பினும், UPI -க்கு கட்டணம் வசூலிக்க அரசாங்கம் மறுத்துவிட்டது. தற்போது GooglePay மற்றும் PhonePe ஆகியவை UPI சந்தையில் 80 சதவீத பங்கைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ரிசர்வ் வங்கியின் கண்டிப்பிற்குப் பிறகு, Paytm இன் UPI பரிவர்த்தனைகள் குறைந்துள்ளன. எனினும், Google Pay, PhonePe போன்ற நிறுவனங்கள் இதனால் பயனடைந்துள்ளன.

யுபிஐ -க்கு கட்டணம் விதிக்கப்பட்டால் 70 சதவீத பயன்பாடு குறையும்

யுபிஐ-க்கு கட்டணம் விதிக்கப்படுவது தொடர்பாக சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. UPI பரிவர்த்தனைகளுக்கு (UPI Transactions) கட்டணம் விதிக்கப்பட்டால், UPI ஐப் பயன்படுத்தும் 70 சதவீத மக்கள் அதை பயன்படுத்துவதை நிறுத்தி விடுவார்கள் என்று அந்த கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இது இலவசமாக இருப்பதே மக்கள் இதை அதிகம் பயன்படுத்த காரணம் என்றும், இதற்கு கட்டணமும் விதிக்கப்பட்டால், மக்கள் அதைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க முடிவு செய்யும் முன் நிறுவனங்கள் இதையும் கண்டிப்பாக கவனத்தில் கொள்ளும்.

மேலும் படிக்க | ரயில் தாமதம் ஆயிடுச்சா? அப்போ பயணிகளுக்கு ரீபண்ட் கண்டிப்பா கிடைக்கும்.. எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News