மொபைல் டவருக்கு TRAI எவ்வளவு பணம் கொடுக்கிறது? ரூ 40 லட்சம் அட்வான்ஸ் 45000 வாடகை?
PIB Fact Check On Mobile Towers Rent: மொபைல் டவர் வைக்க இடம் கொடுத்தால், டிராய் 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து 45,000 மாதாந்திர வாடகை கொடுக்கிறதா? வைரலாகும் செய்தியின் உண்மை சரிபார்ப்பு சோதனை
புதுடெல்லி: சமூக வலைதளங்களில், மக்களை ஏமாற்றுவதற்காக பதுங்கியிருக்கும் மோசடிக்காரர்கள் நிரம்பியுள்ளனர். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மொபைல் டவர் நிறுவ இடம் கொடுப்பவர்களுக்கு கொடுக்கும் வாடகை மற்றும் அட்வான்ஸ் தொகை தொடர்பாக சமூக ஊடகங்களில் செய்திகள் வைரலாகின. மொபைல் டவர் நிறுவ அனுமதி என தலைப்புடன் ஒரு போலி கடிதம் ஒன்று இணையத்தில் வைரலானது
கவர்ச்சிகரமான வாடகை மற்றும் அட்வான்ஸ்
மொபைல் டவர் வைக்க, மாத வாடகையாக ரூ.45,000 மற்றும் ரூ.40 லட்சத்தை முன்பணமாக டிராய் கொடுக்கும் என்று கூறும் கடிதம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாக வைரலானது.
பதிவுக்கட்டணம் எவ்வளவு?
மொபைல் டவர்கள் வாடகைக்கு விட விரும்புபவர்கள், அது குறித்து தகவல்களை தெரிவிக்க 3,800 ரூபாய் செலுத்தி பதிவு செய்துக் கொள்ள வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியின் உண்மைத் தன்மையை சரிபார்க்க PIB உண்மைச் சரிபார்ப்பு சோதனையை மேற்கொண்டு, செய்தி போலியானது என்று கூறியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) அத்தகைய கடிதம் எதையும் வெளியிடவில்லை என்று PIB தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்
PIB உண்மை சரிபார்ப்பு சோதனை
"மொபைல் டவர்களை நிறுவுவதற்கு பதிவுக் கட்டணமாக ஒரு நிறுவனம் ₹3,800 கோருகிறது & மாத வாடகை ₹45,000 மற்றும் முன்பணமாக ₹40 லட்சத்தை TRAI வழங்குவதாகக் கூறுகிறது. இந்தக் கடிதம் போலியானது. TRAI ஒருபோதும் அத்தகைய கடிதங்களை வெளியிடுவதில்லை," PIB ட்வீட் செய்துள்ளது.
PIB மூலம் செய்திகள் போலியா என கண்டறிவது எப்படி?
இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான செய்திகள் ஏதேனும் கிடைத்தால், அதன் நம்பகத்தன்மையை நீங்கள் எப்போதும் அறிந்து கொள்ளலாம் மற்றும் அது உண்மையான செய்தியா அல்லது அது பொய்யான செய்தியா என்பதைச் சரிபார்க்கலாம். அதற்கு, https://factcheck.pib.gov.in என்ற முகவரிக்கு செய்தியை அனுப்ப வேண்டும்.
அதேபோல, ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை சரிபார்க்க, +918799711259 என்ற எண்ணுக்கு WhatsApp செய்தியை அனுப்பலாம். உங்கள் செய்தியை pibfactcheck@gmail.com க்கும் அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்புத் தகவலும் https://pib.gov.in இல் கிடைக்கிறது.
பல போலி இணையதளங்கள் அரசு இணையதளங்கள் என போலியாக மக்களை நம்ப வைத்து பணம் பறித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், பணம் கட்டுவது தொடர்பாகவும், விண்ணப்பத்தொகை செலுத்துமாறும் வரும் இணையதளங்களை முழுமையாக நம்ப வேண்டாம் என்றும், இணையதளத்தில் தங்கள் தகவல்களைப் பகிர்வதற்கு முன்பும் அது சரியானதா இல்லை போலியா என்பதை சரிபார்க்க வேண்டும் என அரசு அறிவுறுத்துகிறது.
மேலும் படிக்க | பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனாவில் விவசாயிகளுக்கு மானியம் கொடுக்கப்படுவது உண்மையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ