புதுடெல்லி: தங்கம், வெள்ளி வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? கடைக்கு போவதற்கு முன்னதாக, இன்று ஆபரணத்தங்கம் மற்றும் வெள்ளியின் விலை என்ன தெரிந்துக் கொண்டால் நல்லது தானே? இன்று காலை (21/09/2023) சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு, ₹5520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் ₹44,160 ரூபாயாக உள்ளது. வாரத்தின் முதல்நாளான இன்று தங்கம் விலை உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 21 அன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை


சுத்த தங்கமான 24 காரட் பொன் விலை கிராமுக்கு 5,622 ரூபாய் என விற்கப்பட்டு வருகிறது. தங்கம் விலை அதிகரித்து சவரன் ஒன்றுக்கு ரூ. ₹44,160 ஆக விற்கிறது.


உங்கள் நகரத்திற்கான லேட்டஸ்ட் தங்கம் 


செப்டம்பர் 21 வியாழன் அன்று, 22 காரட் தங்கத்தின் தினசரி விலையில் (22 carat gold rate today) எந்த மாற்றமும் இல்லை, அதே சமயம் 24K எனப்படும் 24 காரட் தங்கம், ஒரு கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்துள்ளது என்று குட்ரெட்டர்ன்ஸ் இணையதளம் தெரிவித்துள்ளது. எனவே, ஒரு கிராம் 22K தங்கத்திற்கு, வாங்குபவர்கள் ₹5520 மற்றும் எட்டு கிராமுக்கு ₹44,160 செலுத்த வேண்டும். 10 கிராம் மற்றும் 100 கிராமுக்கு முறையே ₹55,200 மற்றும் ₹5,52,000 செலுத்த வேண்டும்.


அதேபோல ஒரு கிராம் 24K தங்கம் ₹6023க்கும், எட்டு கிராம் ₹48,184க்கும், 10 கிராம் ₹60,230க்கும், 100 கிராம் ₹6,02,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


மேலும் படிக்க | UPI பரிவர்த்தனையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை!


22K தங்கம் (விலை/10கிராம்) 24K தங்கம் (விலை/10 கிராம்) விலை நகர வாரியாக:
அகமதாபாத் ₹55,250 ₹60,270
பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா, மும்பை ₹55,200 ₹60,230
சென்னை ₹55,500 ₹60,550
டெல்லி ₹55,350 ₹60,370


எவ்வாறாயினும், மேலே குறிப்பிட்டுள்ள தங்கத்தின் விலை குறிகாட்டியாக மட்டுமே உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விலைகளில் ஜிஎஸ்டி, டிசிஎஸ் மற்றும் பிற வரிகள் இல்லை என்பது குறிப்பிடத்தகக்து. அந்தந்த மாநிலத்தின் வரிகள் தங்கத்தின் விலை மாறுபடும்.


வெள்ளி விலை
செப்டம்பர் 21ம் தேதி வியாழக்கிழமையன்று, வெள்ளியின் விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலை நேற்றைய விலையில் இருந்து கிராமுக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. எனவே, ஒரு கிராம் உலோக வெள்ளி ₹74.50 ஆகவும், எட்டு கிராம் ₹596 ஆகவும், 10 கிராம், 100 கிராம் மற்றும் 1 கிலோகிராம் வெள்ளியின் விலை முறையே ₹745, ₹7450 மற்றும் ₹74,500 ஆகவும் உள்ளது.


இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரமானது, காலை 8 மணி நிலவரத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது.  தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்படுவதற்கு பல காரணிகள் காரணமாகின்றன. சர்வதேச சந்தையின் பணவீக்கம், மத்திய வங்கிகளின் தங்க இருப்பு, வட்டி விகிதங்கள், நகைச்சந்தை, இயற்கை காரணிகள், வர்த்தகப் போர்கள் போன்ற பல காரணங்களால்  விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். 


மேலும் படிக்க: 20 நாட்களில் ரூ.3.80 கோடியை தாண்டிய பழனி கோயில் காணிக்கை வரவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ