புதுடெல்லி: அதானி சிமென்ட் கடந்த ஆண்டு செப்டம்பரில் 6.6 பில்லியன் டாலர்களுக்கு ஏசிசி மற்றும் அம்புஜா சிமென்ட் நிறுவனங்களை வாங்கியது. இதற்காக, கெளதம் அதானியின் நிறுவனம் கடன் வாங்கியிருந்தது. இப்போது இதிலிருந்து $3.5 பில்லியன் மதிப்புள்ள கடன்கள் மறுநிதியளிப்பு செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

350 கோடி டாலர் 'கடன்' வாங்கிய கௌதம் அதானி, இப்போது புதிதாக என்ன செய்யத் தயாராகிறார்?


அதானி குழுமக் கடன் மறுநிதியளிப்பு: மூத்த தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பெரிய அளவில் தொழில் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதானி சிமென்ட் சமீபத்தில் 10 வங்கிகளிடம் இருந்து $3.5 பில்லியன் ($350 கோடி) கடன் பெற்றுள்ளது.


இந்தக் கடன் மூன்று ஆண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளது. அதாவது மூன்று ஆண்டுகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தவேண்டும். அதானி குழுமத்தின் மீது சர்வதேச நிறுவனங்களின் நம்பிக்கை அதிகரித்து வருவதால் இந்த மறுநிதியளிப்பு சாத்தியமாகியுள்ளதாக குழுமம் சார்பில் கூறப்பட்டது.


ஆனால் ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமத்தின் பங்குகள் உயர்ந்த பிறகு இப்போது ஏன் இந்த மறுநிதியளிப்பு செய்யப்பட்டது என்ற கேள்வி எழுகிறது. அதானி குழுமம் ஏதாவ்து மிகப் பெரிய புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதா, அதனால் என்ன பயன்? என கேள்விகள் எழுகின்றன. அதிலும், ஆளும் பாஜக கட்சிக்கும் அதானி குழுமத்திற்கும் உள்ள தொடர்புகள் தொடர்பான சர்ச்சைகளுக்கு இடையில் இந்த செய்தி வந்துள்ளது.


பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டிய காங்கிரஸ் மூத்தத் தலைவர்களின் ஒருவரான ராகுல் காந்தி, கவுதம் அதானி இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்குகிறார் என்றும், அது இந்தியாவுக்கு வரும்போது அதன் விலை இரட்டிப்பாகிறது என்று தெரிவித்தார்.


மேலும் படிக்க | மின்கட்டணம் உயர்வுக்கு காரணம் யார்? அதானிக்கு எதிராக ராகுல் கூறிய குற்றச்சாட்டுகள் என்ன?


மறு நிதியளிப்புக்கான காரணம் என்ன?


எந்தவொரு பெரிய குழுவும் தவணைகளின் சுமையை குறைக்க மற்றும் மில்லியன் கணக்கான டாலர்களை சேமிக்க கடன் மறுநிதியளிப்பு வசதியைப் பெறுகிறது. இதில், குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடன் எடுக்கப்பட்டு, பழைய கடன் மூடப்படுகிறது. இதற்குப் பிறகு, குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனைத் திருப்பிச் செலுத்தும் நடைமுறை தொடங்குகிறது.


கடன் வாங்கிய ஒருவர், வேறொரு வங்கியிலோ அல்லது அதே வங்கியிலோ புதிய கடன் வாங்கலாம். மறுநிதியளிப்பில், ஒரு புதிய கடனை எடுக்கும்போது, ​​உங்கள் வசதிக்கேற்ப கடனின் காலத்தை அதிகரிக்கலாம் அல்லது குறைக்கலாம். குறைந்த வட்டி விகிதங்கள் EMI மற்றும் வட்டி இரண்டின் சுமையை குறைக்கின்றன.


தற்போது அதானி குழுமத்தின் மறுநிதியளிப்பு தொடர்பான செய்திகள் வெளியான பிறகு, அதானி குழுமத்தின் அம்புஜா மற்றும் ஏசிசி சிமென்ட் பங்குகளில் சரிவு காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை வர்த்தக நேர முடிவில், ஏசிசி பங்குகள் ரூ.68.55 சரிந்து ரூ.1962.35-ல் முடிந்தது. அதே நேரத்தில் அம்புஜா பங்குகள் ரூ.6.45 சரிந்து ரூ.430.85ஐ எட்டியது. இந்தப் பங்கின் 52 வார உயர் மதிப்பு ரூ.598.15 ஆகவும், குறைந்த அளவு ரூ.315.30 ஆகவும் உள்ளது.


மேலும் படிக்க | Bad Debts: பாஜகவின் 9 ஆண்டு ஆட்சியில் வராக் கடன் எவ்வளவு? 14,56,226 கோடி ரூபாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ