1 கோடி இளைஞர்களுக்கு மாதா மாதம் ரூ.5000.. அட்டகாசமான திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம்.
PM Internship Scheme: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்களை பற்றி அறிவித்தார். அவற்றில் ஒரு முக்கியமான திட்டம் பிஎஃப் இன்டர்ன்ஷிப் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் அடுத்த அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்தில், ஒவ்வொரு இன்டர்ணுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5000 வழங்கப்படும். இது தவிர, அரசு சார்பில், 1 ஆண்டுக்குப் பிறகு தனித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும். இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் அக்டோபர் 3, 2024 முதல் அரசால் நேரலை செய்யப்பட்டது.
பிஎஃம் இன்டர்ன்ஷிப் திட்டத்தை எப்போது, எங்கு, யார் பயன்படுத்திக்கொள்ள முடியும்? இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: எவ்வளவு கொடுப்பனவு கிடைக்கும்?
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு இன்டர்ணுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும். இது தவிர, அரசு தரப்பில் 1 ஆண்டுக்குப் பிறகு தனித் தொகையாக ரூ.6000 வழங்கப்படும். இந்த மாதாந்திர உதவித்தொகையான ரூ.5000-ல் 10 சதவீதம் அதாவது ரூ.500 நிறுவனங்கள் தங்கள் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து அளிக்கும். அரசு 4500 ரூபாயை அளிக்கும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmama Sitharaman) 2024-25 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டில் PM இன்டர்ன்ஷிப் திட்டத்தைப் பற்றி அறிவித்தார். இதில் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 கோடி இளைஞர்கள் பயனடைவார்கள். முதல் கட்டமாக முதல் 2 ஆண்டுகளில் 30 லட்சம் இளைஞர்களும், அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 70 லட்சம் பேரும் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள்.
PM Internship Scheme: டாப் 500 நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பு
PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்கள் நாட்டின் சுமார் 500 முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற உள்ளனர். நிறுவனங்கள் தங்களின் CSR செயல்பாட்டின் ஒரு பகுதியாக, இத்திட்டத்தில் 10 சதவீத உதவியை வழங்கி இளைஞர்களுக்கு 1 வருட பணி அனுபவத்தை வழங்க உள்ளன.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: இந்த திட்டத்தில் யார் விண்ணப்பிக்கலாம்?
21 முதல் 24 வயதுக்குட்பட்ட அனைத்து இளைஞர்களும் இதில் விண்ணப்பிக்கலாம். அவர்களிடம் 10வது தேர்ச்சிச் சான்றிதழ் இருக்க வேண்டும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: இந்த திட்டத்தில் யார் விண்ணப்பிக்க முடியாது?
குடும்ப உறுப்பினர்களில் யாராவது அரசு வேலையில் பணிபுரிந்தாலோ, அல்லது குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கு மேல் இருந்தாலோ, விண்ணப்பிக்க விரும்பும் நபர் முழுநேர வேலையில் இருந்தாலோ, அத்தகைய நபர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம்: இதற்கு விண்ணப்பிப்பது எப்படி?
- PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் அதற்கான அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் சென்று ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
- அங்கு உங்கள் திறமைகள் மற்றும் விருப்பங்கள் பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்.
- அதன் பிறகு உங்கள் தகுதியின் அடிப்படையில் நீங்கள் எங்கு இன்டர்ன்ஷிப் செய்யலாம் என்று முடிவு செய்யப்படும்.
இதில் வின்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முன், ஆதார் அட்டை, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், முகவரிச் சான்று, கல்வி விவரங்கள் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களைத் தயாராக வைத்திருக்க வேண்டும்.
PM இன்டர்ன்ஷிப் திட்டத்திற்கான பிரத்யேக போர்டல் அக்டோபர் 3 முதல் லைவ் செய்யப்பட்டுள்ளது. எனினும், இதில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அக்டோபர் 12 முதல் இந்தத் திட்டத்தில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ