புதுடெல்லி: திடீரென வரும் பணத்தேவைகள், கடன் வாங்க வைக்கின்றன. அப்போது பாதுகாப்பாகவும், குறைந்த வட்டியிலும் எங்கு கடன் கிடைக்கும் என்று பலரும் தேடுகின்றனர். ஆனால், சிலருக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல், அதிக வட்டிக்கு கடன் வாங்கி, வட்டி கூட கட்ட முடியாமல் சிக்கலை எதிர்க்கொள்கின்றனர். பல்வேறு வகையான கடன்களும், கடன் வழங்கும் நிறுவனங்கள் பல இருந்தாலும், எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடன் என்பது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடன்களைப் பெறுவதற்கும் அவசர நிதித்தேவைகளை நிறைவேற்றுவதற்கும் சிறந்த வழிகளில் ஒன்றாக இருப்பது எல்ஐசி பாலிசியை அடகு வைத்து கடன் வாங்குவது என்பது குறிப்பிடத்தக்கது. குறுகிய கால கடன்கள் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கிறது. இந்திய நுகர்வோரின் நிதித் தேவைகளைத் தீர்க்க உதவும் எல்ஐசி காப்பீட்டு பாலிசிக்கு எதிராக கடன் வாங்குவதைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். 


காப்பீடு பாலிசிக்குக் எதிரான கடன், அவசர காலங்களில் உதவியாக இருக்கும், ஏனெனில் இது ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதத்தில் அதிக கடன் தொகையை வழங்குகிறது. பல எல்ஐசி பாலிசிகள், கடன் வசதியுடன் வருகின்றன. சரி, கடன் தொகை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்? தெரிந்துக் கொள்வோம்.


எந்தவொரு பாதகமான சூழ்நிலையையும் சமாளிக்க காப்பீட்டுத் திட்டங்கள் சிறந்த கருவியாகச் செயல்படுகின்றன. பணி ஓய்வுக்குப் பிறகும் பயனளிக்கும் பெரும்பாலான ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகள் சேமிப்பு மற்றும் காப்பீட்டுத் கவரேஜ் ஆகியவற்றின் உரிய பலன்களுடன் வருகின்றன. கடன்களைப் பெற, எல்ஐசி பாலிசிகள் போன்ற உங்கள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை நீங்கள் பயன்படுத்தலாம். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (Life Insurance Corporation of India) வழங்கும் பல காப்பீட்டுத் திட்டங்கள் கடன் பெறத் தகுதியானவை.


மேலும் படிக்க | மிகப்பெரிய பலன்களை தரும் மத்திய அரசின் சிறந்த 4 ஓய்வூதியத் திட்டங்கள்!


காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்து, அவசர நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கு எதிராக ஒருவர் கடனைப் பெறலாம். இந்தக் கடன்கள் நெகிழ்வான திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் உட்பட பல்வேறு நன்மைகளுடன் வருகின்றன.


கடன் தொகை நிர்ணயம்
இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக நீங்கள் எவ்வளவு பணம் பெறலாம்? என்ற கேள்விக்கு எல்ஐசி மற்றும் பிற தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கடன் வழங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம். மற்ற காப்பீட்டாளர்கள் வழங்கும் பெரும்பாலான காப்பீட்டு பாலிசிகள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் கடன் தகுதி கூறுகளுடன் வருகின்றன.


அதாவது ஆயுள் காப்பீட்டுக் கொள்கைக்கு எதிராக கடன் வழங்குபவர்களிடம் அடமானம் வைத்து கடன் பெறலாம். எல்ஐசி எண்டோமென்ட் திட்டங்களில் பெரும்பாலானவை கடன் வசதிகளுக்கு தகுதியானவை. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின் சரண்டர் மதிப்பின் அடிப்படையில் கடன் தொகை தீர்மானிக்கப்படுகிறது.


கடன் வாங்குபவர்கள் எல்ஐசி பாலிசியின் சரண்டர் மதிப்பில் 85 முதல் 90 சதவீதம் வரை கடன் வாங்கலாம். உதாரணமாக, உங்கள் காப்பீட்டுக் கொள்கையின் சரண்டர் மதிப்பு பத்து லட்சமாக இருந்தால், உங்களுக்கு 9 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும்.


கடன் வசதியைப் பெற நீங்கள் தேர்ந்தெடுத்த கடன் வழங்குபவர் அல்லது வங்கியைப் பொறுத்து திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் மற்றும் கடன் வட்டி விகிதங்கள் மாறுபடும். இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று, வட்டி விகிதங்கள் பொதுவாக தனிநபர் கடன்கள் அல்லது வங்கிகள் வழங்கும் பாதுகாப்பான கடன்களை விட குறைவாக இருக்கும்.


கடனுக்கான வட்டி விகிதம்
எல்ஐசி பாலிசிக்கு எதிரான கடனுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 10 சதவீதத்தில் தொடங்குகிறது. காப்பீட்டு திட்டத்திற்கு எதிரான கடனுக்கான வட்டி விகிதம் கடனளிப்பவரைப் பொறுத்து மாறுபடும். லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், தனது பாலிசிகளுக்கு எதிராக ஆண்டுக்கு 10 சதவீத வட்டி விகிதத்தில் கடன்களை வழங்குகிறது.


கடன் திருப்பி செலுத்தும் காலம்


எல்ஐசி பாலிசியின் பேரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதும், திருப்பி செலுத்தும் முறைகளும் நெகிழ்வானவையாக இருக்கிறது. கூடுதலாக, வட்டியை மட்டும் செலுத்தும் தெரிவையும் எல்ஐசி அனுமதிக்கிறது மற்றும் அசல் தொகையை உங்களின் மொத்த முதிர்வு இருப்பில் இருந்து கழித்துக் கொள்ளும் வசதியையும் எல்ஐசி கொடுக்கிறது.


மேலும் படிக்க | பென்ஷன் இல்லை என்ற கவலை வேண்டாம்... LIC வழங்கும் அச்சதலான ஜீவன் சாந்தி திட்டம்!


எல்ஐசி பாலிசியின் பேரில் கடன் வாங்கினால் என்ன நன்மை?  


தனிநபர் கடனுடன் ஒப்பிடும்போது அதிக கடன் மதிப்பு கிடைக்கும்


குறைவான வட்டி விகிதங்கள்.


குறைந்தபட்ச ஆவணங்கள் போதுமானது


காப்பீட்டு பாலிசி முதிரும்போது கடன் நிலுவையைச் செலுத்தலாம்


இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராக கடன் வாங்கினால் செய்யக்கூடாத தவறுகள் என்ன? கடனின் தீமைகள் பின்வருமாறு:


கடன் வாங்கிய பிறகு, பீரீமியம் செலுத்தத் தவறினால், பாலிசி காலாவதியாகிவிடும்


காப்பீட்டு பாலிசி வாங்கிய மூன்றாண்டுகளுக்கு பிறகே கடன் வாங்க முடியும்


எல்லா இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கும் கடன் கிடைக்காது


பாலிசியின் தொடக்க ஆண்டுகளில் கடன் தொகை குறைவாகவே கிடைக்கும்


மேலும் படிக்க | டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கும்போது குழப்பமா? உங்கள் மதிப்பு இதுதான்! கால்குலேட்டர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ