பாரதிய ஜனதா கட்சியின் முதல் ஆட்சிக் காலத்தில், 2016 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதை அடுத்து, அப்போது புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு நவம்பரில் 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி, கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாகவும், அவை 2023 செப்டம்பர் 30க்கு பிறகு செல்லாது என்றும் அறிவித்தது. இதை எடுத்து நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் வங்கியில் ஒப்படைத்து, அதனை தங்கள் கணக்கில் டெபாசிட் செய்து கொள்கிறோம், அல்லது வேறு நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளித்தது. அதற்கான காகெடுகவும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது


இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) முடிவால், பணப்புழக்கத்தில் ஓரளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி மாதத்தில் வங்கிகள் பெற்ற ரொக்க டெபாசிட்கள் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. இதுவும் ரூ.2,000 கரன்சி நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதற்குக் காரணமாக இருக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. பிப்ரவரி 9, 2024 நிலவரப்படி, ரிசர்வ் பணத்தின் (RM) வளர்ச்சி ஒரு வருடத்திற்கு முன்பு 11.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. 


மேலும், ரிசர்வ் வங்கியின் மிகப்பெரிய அங்கமான CiC என்ன ரொக்க பண புழக்கம், ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த 8.2 என்ற அளவில் இருந்து இலிருந்து 3.7% ஆகக் குறைந்துள்ளது. ஜன. 31ஆம் தேதி நிலவரப்படி, கிட்டத்தட்ட 97.5% ரூபாய் 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கி அமைப்பிற்கு திரும்பி விட்டன. இன்னும் சுமார் 8,897 கோடி ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மட்டுமே இன்னும் பொதுமக்களிடம் உள்ளன என கூறப்படுகிறது.


மேலும் படிக்க | டெல்லிக்கே ராஜா என்றாலும் இங்கு பாஜக கூஜாதான் - கடம்பூர் ராஜு பேச்சு!


ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கைக்கான காரணம் தனது ‘Clean Note Policy’ என்னும் கொள்கை என குறிப்பிட்ட மத்திய ரிசர்வ் வங்கி, தரமான ரூபாய்த் தாள்கள் மட்டுமே புழக்கத்தில் இருப்பதை இந்த கொள்கை உறுதி செய்யும் என குறிப்பிட்டிருந்து.


மேலும், கடந்த மே மாதம் மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கிட்டத்தட்ட 89 சதவிகித 2,000 ரூபாய் நோட்டுகள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் வழங்கப்பட்டவை  என்றும் அவற்றின் ஆயுட்காலம் 4 முதல் 5 வருடங்கள் தான் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், பொதுவாக 2,000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப் படுவதில்லை என்றும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்டிருந்த ரிசர்வ் வங்கி, மொத்தம் 6.73 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்குப் புழக்கத்தில் இருந்த 2,000 ரூபாய் நோட்டுகள், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 3.62 லட்சம் கோடியாகக் குறைந்தன என கூறியிருந்தது.


மேலும் படிக்க | ரத்த தானம்... தன்னார்வலர்களின் பெயரில் நடைபெறும் மெகா மோசடி..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ