PUBG Mobile India நாளை தொடங்கப்படுமா? உண்மை நிலை என்ன?
PUBG மொபைல் இந்தியா இன்று தொடங்கப்படுமா? என்பது தான் இன்று இந்தியாவில் முக்கிய பேச்சாக உள்ளது.
PUBG கார்ப்பரேஷனின் இந்திய பதிப்பின் புதிய டிரெய்லர் விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகிறது.
PUBG மொபைல் இந்தியா இன்று தொடங்கப்படுமா? என்பது தான் இன்று இந்தியாவில் முக்கிய பேச்சாக உள்ளது.
PUBG மொபைல் இந்தியா இந்த மாதத்தில் அதாவது ஜனவரி 2021 இல் தொடங்கப்பட உள்ளது என்று PUBG விளையாட்டு பிரியர்கள் நம்புகின்றனர். சில பயனர்கள் இந்த விளையாட்டு இன்று வெளியிடப்படும் என்று கூறி வருகின்றனர். PUBG ரசிகர்கள் கடந்த 3 மாதங்களாக PUBG மொபைல் இந்தியா அறிமுகப்படுத்தப்படுவதற்காக காத்திருக்கிறார்கள்.
PUBG கார்ப்பரேஷனின் இந்திய பதிப்பின் புதிய டிரெய்லர் விரைவில் வெளிவரும் என்றும் நம்பப்படுகிறது. டிரெய்லரின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது இன்னும் வெளியிடப்படவில்லை.
அதே நேரத்தில், PUBG மொபைல் இந்தியாவின் (India) டிரெய்லர் மட்டுமல்ல, விளையாட்டையும் தொடங்கலாம் என்பது போன்ற தகவல்கள் வெளிவருகின்றன. ஒரு யூடியூப் வீடியோவில் PUBG இந்தியாவில் ஜனவரி 15 முதல் ஜனவரி 19 வரை தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. PUBG கார்ப்பரேஷனும் இது குறித்து எதுவும் கூறவில்லை இந்திய அரசிடமிருந்து எந்த வித தகவலும் வரவில்லை.
இந்த விளையாட்டை தொடங்குவதற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்காத வரை இந்தியாவில் தொடங்கப்படாது. ஆனால், PUBG மொபைல் விளையாட்டு விரைவில் இந்தியாவுக்கு வரக்கூடும். என்பது விளையாட்டு பிரியர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி.
PUBG கார்ப்பரேஷன் அதன் டிரெய்லர்களை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தது. PUBG Mobile India என்ற பெயரில் ஒரு நிறுவனமும் பதிவு செய்யப்பட்டது.
இந்த விளையாட்டு தொடங்குவது தொடர்பான அனைத்து வதந்திகளையும் இந்திய அரசு நிராகரித்திருந்தது. அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. பப்ஜி மொபைல் இந்தியா தொடர்பாக பப்ஜி கார்ப்பரேஷன் மற்றும் தக்வல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே எந்த விதமான பிரச்சனையும் இல்லை என்று நம்பப்படுகிறது. இன்று அல்லது இந்த மாதத்தில் இந்த விளையாட்டைத் தொடங்கலாம் என்பதையே இது உணர்த்துகிறது.
PUBG மொபைல் இந்தியா இந்த மாதத்தில் தொடங்கப்படுகிறதோ, இல்லையோ, ஆனால், ஜனவரி 26, 2021 அன்று, மேட் இன் இந்தியா விளையாட்டு FAUG அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். . சில நேரங்களில் அது அதன் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகும் என கூறப்படுகிறது. PUBG VS FAUG என்பது தான் இன்றைய பேசு பொருளாக உள்ளது.
ALSO READ | Floating Train: பறக்கும் ரயில் பழைய கதையானது, சீனாவில் வருகிறது மிதக்கும் அதிவேக ரயில்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR