புதுடெல்லி: இந்தியாவில் வசிப்பவர்களின் அடையாளச் சான்றாக ஆதார் அட்டை செயல்படுகிறது. மக்கள் தங்கள் பெயர், முகவரி, மொபைல் எண், மற்றும் பயோமெட்ரிக் போன்ற அடிப்படை விவரங்களை கொடுத்து ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். பதிவுசெய்யப்பட்ட மையங்களில் பயோமெட்ரிக்ஸ் ஆஃப்லைனில் செய்யப்பட வேண்டும் என்றாலும், ஒருவரின் மொபைல் எண்ணை ஆதாருடன் பதிவு செய்தால், முகவரியுடன் பல விவரங்களை ஆன்லைனில் மாற்றலாம். முகவரி புதுப்பிப்புக்கான ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்துக் கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முகவரி புதுப்பிப்பை ஏற்காததற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள். அதிகாரப்பூர்வ இணையதளத்தின்படி, ஆதார் அட்டை புதுப்பிப்பு கோரிக்கைகளுடன் முறையான ஆவணங்கள் இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் பெயரில் உள்ள செல்லுபடியாகும் ஆவணம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். புதிய புதுப்பிப்பு கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன் சில விஷயங்களை உறுதிசெய்யவும்.


மேலும் படிக்க | ஹெல்த் இன்சூரன்ஸ் தொடர்பாக புத்தாண்டில் அதிரடி மாற்றம்! அரசு சூசகத் தகவல்


1. ஆவணம் சரியானதாக இருக்க வேண்டும்.


2. புதுப்பிப்பு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்ட குடியிருப்பாளரின் பெயரில் ஆவணம் இருக்க வேண்டும்


3. முகவரி விவரங்கள் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியுடன் பொருந்த வேண்டும்.


4. பதிவேற்றப்பட்ட படம் அசல் ஆவணத்தின் நகல் தெளிவான வண்ண ஸ்கேன் ஆக இருக்க வேண்டும்.


5. பயோமெட்ரிக்ஸ் விவரங்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் பழையது இல்லை என்பதை உறுதிப்படுத்தவும்.


ஆதார் முகவரியை மாற்ற ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்கள்:
28 ஆவணங்கள் ஆதார் கார்டு முகவரி மாற்றத்துக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஏற்றுக் கொள்ளக்கூடிய முகவரி சான்றுகள் (POA)


-பாஸ்போர்ட்  
-வங்கி அறிக்கை (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை)
- ரேஷன் கார்டு
- வாக்காளர் அடையாள அட்டை
-ஓட்டுனர் உரிமம்
- ஓய்வூதிய அட்டை
- ஊனமுற்றோர் அட்டை
மாநில/மத்திய அரசு/பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய CGHS/ECHS/ESIC/Medi-Claim Card
ப்ரீபெய்ட் ரசீதுகள் உட்பட மின்சார பில்கள் (மூன்று மாதங்களுக்குட்பட்டது).
- தண்ணீர் பில் (மூன்று மாதங்களுக்கு மேல் இல்லை)
-தொலைபேசி லேண்ட்லைன் பில்/ தொலைபேசி (போஸ்ட்பெய்டு மொபைல்) பில்/ பிராட்பேண்ட் பில் (மூன்று மாதங்களுக்குட்பட்டது)
-காப்பீட்டு பாலிசி 
-சொத்து வரி ரசீது (ஒரு வருடத்திற்கு உட்பட்டது)


குறிப்பு: இந்த ஆவணங்களில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் நபரின் பெயர் இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | வரி சேமிப்பு பலனுடன்... அதிக வட்டி தரும் ‘அசத்தலான’ FD முதலீட்டு திட்டங்கள்!


உங்கள் ஆதார் முகவரி புதுப்பிப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்வது?
ஆதார் அட்டையை உருவாக்கிய 10 ஆண்டுகளுக்குள் பயோமெட்ரிக்ஸைப் புதுப்பித்துள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது வங்கி அறிக்கை (பாஸ்புக், தபால் அலுவலக கணக்கு அறிக்கை) போன்ற தனிப்பட்ட ஆவணத்துடன் விண்ணப்பிக்க முயற்சிக்கவும்.


தேவையான அனைத்து ஆவணங்களுடன் அவர்களின் வங்கிக்குச் சென்று பாஸ்புக்கில் புதிய முகவரியுடன் விண்ணப்பிப்பதன் மூலம் பாஸ்புக்கில் ஒருவரின் முகவரியைப் புதுப்பித்துக்கொள்வது ஒரு எளிய முறையாகும். புதுப்பிக்கப்பட்ட முகவரி இருந்தால் ஒருவர் தனது பாஸ்போர்ட்டையும் பயன்படுத்தலாம். அங்கீகரிக்கப்பட்ட படிவத்தை ஆவணச் சான்றாகப் பயன்படுத்தி, ஆன்லைனில் முகவரியை மாற்றிக்கொள்ளலாம்.


மேலும் படிக்க | நாம் வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? வருமான வரியின் புதிய விதிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ