உலக புகழ்பெற்ற வாட்ஸ்அப்பின் மெசஞ்சர் இந்தியாவில் உள்ளவர்களுக்கு கடன் வசதியையும் வழங்கும் என அறிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக புகழ்பெற்ற WhatsApp-ன் மெசஞ்சர் இந்தியாவில் உள்ளவர்களுக்கு கடன் வசதியை வழங்க இந்நிறுவனம் இந்திய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு காப்பீடு மற்றும் ஓய்வூதியத்தையும் நிறுவனம் வழங்கும்.


இந்த சேவைகள் பேஸ்புக்கிற்கு சொந்தமான நிறுவனமான வாட்ஸ்அப், ICICI வங்கி மற்றும் HDFC வங்கி ஆகியவற்றுடன் கூட்டுசேர்ந்துள்ளன. தற்போது, ​​வாட்ஸ்அப்பின் கீழ், கிராமப்புறங்களில் இந்த சேவை வழங்கப்படுகிறது. இத்த திட்டங்கள் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், குறிப்பிட்ட அளவிலான வார்த்தகமும் வருவாயும் இருந்தால் கூட WhatsApp பெரிய அளவில் முதலீடு செய்து விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. 


இது குறித்து வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஸ்ஜீத் போஸ் கூறுகையில்.... "வாட்ஸ்அப் தனது இந்திய வாடிக்கையாளர்களுக்காகக் கடன், மைக்ரோ இன்சூரன்ஸ், மைக்ரோ பென்ஷன் திட்டங்களைப் பெறுவதற்கான தளத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக அவர் கூறினார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு, வரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான வங்கிகளுடன் கையெழுத்திடுவதன் மூலம் வங்கி சேவைகளை எளிதாக்குவதே இதன் நோக்கம் எனவும் இந்தச் சேவைகளை WhatsApp குளோபல் பின்டெக் விழாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


ALSO READ | IRCTC ePayLater: பணம் இல்லாமலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்!!


இந்தியாவில் தற்போது Paytm, PhonePay, Amazon ஆகிய நிறுவனங்கள் தற்போது நிதியியல் சேவைகளை அளித்து வரும் நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் தங்களது நிதியியல் சேவைகளை விரிவாக்கம் செய்யப் பல்வேறு முதலீடுகளையும் கூட்டணியையும் உருவாக்கியது.


இந்த 3 நிறுவனங்களின் ஆதிக்கத்தை எளிதாக WhatsApp தகர்த்துவிட முடியும், காரணம் WhatsApp இந்தியாவில் வைத்திருக்கும் 400 மில்லியன் வாடிக்கையாளர்கள் தான். வெறும் 10 சதவீதம் பேர் WhatsApp-ன் புதிய நிதியியல் சேவையைப் பயன்படுத்தினால் கூட 4 கோடி வாடிக்கையாளர்கள் எளிதாக வாட்ஸ்அப் பெற்றுவிட முடியும்.