புதுடெல்லி: அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று, 2024 ஆம் ஆண்டு ஆரம்பமானது. புத்தாண்டின் முதல் நாளான இன்று ஜனவரி 1ம் தேதியுடன், வாரத்தின் முதல் நாளும் தொடங்குகிறது. வருடத்தின் முதல் நாளில் பல இடங்களில் விடுமுறை உண்டு. அதில் வங்கி மற்றும் பங்குச் சந்தைகளுக்கான விடுமுறை, பொதுமக்களின் நாளை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வங்கிகளுக்கு விடுமுறை, பங்குச்சந்தை திறப்பது, மூடுவது குறித்து மக்கள் மனதில் எழும் கேள்விகளுக்கான பதில் இது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கி மற்றும் பங்குச் சந்தை விடுமுறைகள்


பங்குச் சந்தைகள் ஜனவரி 1 திங்கள் அன்று திறந்திருக்கும். இரண்டு நாள் வார இறுதிக்குப் பிறகு, 2024 ஆம் ஆண்டின் சந்தையில் முதல் நாள் வர்த்தகம் திங்கட்கிழமை திட்டமிட்டபடி தொடங்கும். புத்தாண்டின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச் சந்தையில் விடுமுறை இல்லை, பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ திட்டமிட்டபடி செயல்படும். ஜனவரி 1ம் தேதி வழக்கம் போல் பங்குச் சந்தையில் வர்த்தகம் நடைபெறும்.


ஜனவரி 1ம் தேதி வங்கிகள் மூடப்படுமா?


நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் ஜனவரி 1ஆம் தேதி வங்கிகள் மூடப்பட்டிருக்கும். வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வருடத்தின் முதல் நாளில் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நாளில் சில மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தவிர, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சில இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களும் நாளை மூடப்படும்.


மேலும் படிக்க | இனி வங்கிகள் கண்டபடி அபராத கட்டணம் விதிக்க முடியாது... RBI-யின் புதிய விதிகள்!


இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறைப் பட்டியலின்படி, ஜனவரி 1, 2024 அன்று, ஐஸ்வால், சென்னை, காங்டாக், இம்பால், இட்டாநகர், கோஹிமா, ஷில்லாங், மணிப்பூர், மேகாலயா, அசாம், நாகாலாந்து, சிக்கிம் ஆகிய இடங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.


2024 ஆம் ஆண்டில் பங்குச் சந்தை எப்போது மூடப்படும்?
பிஎஸ்இ வழங்கிய தகவலின்படி, 2024 ஆம் ஆண்டில் வார இறுதி நாட்களைத் தவிர இந்த ஆண்டு பங்குச் சந்தையில் 14 விடுமுறைகள் உள்ளன. ஜனவரியில் வார இறுதி நாட்களைத் தவிர, ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும். ஜனவரி 20ம் தேதி சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறும்.


இது தவிர மார்ச் 8ம் தேதி மகாசிவராத்திரி நாளன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர  மார்ச் மாதத்தில் பங்குச் சந்தைகள் மார்ச் 25, மார்ச் 29 ஆகிய இரு தினங்களும் இயங்காது. ஏப்ரல் 11, ஏப்ரல் 17, மே 1, ஜூன் 17, ஜூலை 17, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2, நவம்பர் 1, நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 25 ஆகிய தேதிகளில் பங்குச் சந்தைக்கு விடுமுறை என்று தெரிகிறது.


மேலும் படிக்க | Budget 2024: தேர்தலுக்கு முன் இவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்க தயாராகிறதா அரசு? பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ