மும்பை: இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.16,180 கோடிக்கு மேல் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்ததாக அந்த அதிகாரி எஃப்.ஐ.ஆர். பேமெண்ட் கேட்வே சேவை வழங்கும் நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்து, பல்வேறு வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.16,180 கோடி மதிப்பிலான பணத்தை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சிலர் பறித்துச் சென்றதாக தானே காவல்துறையினர் தெரிவித்தனர். பேமென்ட் கேட்வே (payment gateway account) என்பது பேபால், பேடிஎம், ரேஜர்பே போன்ற ஆன்லைன் பணபரிமாற்ற செயலிகள் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் உள்ள ஸ்ரீநகர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஏப்ரல் பேமென்ட் கேட்வே கணக்கை ஹேக் செய்து ரூ.25 கோடி பறிக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு பிரம்மாண்டமானது என்பது தெரிந்து காவல்துறையே அதிர்ந்து போனது. 


தானே குற்றப்பிரிவு அதிகாரியிடம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நௌபாடா போலீசார், சஞ்சய் சிங், அமோல் ஆண்டலே என்னும் அமன், கேதார் என்னும் சமீர் திகே, ஜிதேந்திர பாண்டே மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல்), 409 ஆகியவற்றின் கீழ் வெள்ளிக்கிழமை எஃப்ஐஆர் பதிவு செய்தனர். (கிரிமினல் நம்பிக்கை மீறல்), 467, 468 (போலி), 120பி (குற்றவியல் சதி) மற்றும் 34 (பொது நோக்கம்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (First Information Report (FIR)) பதிவு செய்தனர்.


மேலும் படிக்க | Cyber Alert: பாகிஸ்தானின் சைபர் கிரைம் யுத்தம்! இந்த 3 செயலிகளை பயன்படுத்த வேண்டாம்!


முதல் தகவல் அறிக்கையின்படி, குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர பாண்டே, முன்பு 8 முதல் 10 ஆண்டுகள் வங்கிகளில் வாடிக்கையாளர் தொடர்பு மற்றும் விற்பனை மேலாளராக பணிபுரிந்தார். இந்த குற்றம் ஆயிரக்கணக்கான வங்கிக் கணக்குகளில் பரவி, வேறு பல கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.


இந்த மோசடி தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். நீண்ட காலமாக நடந்து வரும் இந்த பிரம்மாண்டமான மோசடியில் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பான பல போலி ஆவணங்களை காவல்துறை விசாரணை குழு மீட்டுள்ளது. சைபர் கிரைம் தொடர்பான இந்த வழக்கு, ஆன்லைன் பணப்பரிமாற்றம் தொடர்பான நம்பகத்தன்மையை எழுப்புகிறது. அதிலும் குறிப்பாக, 25 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக என்று சொன்ன புகாரின் பின்னணியில் மோசடி செய்யப்பட்ட தொகையின் அளவு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் என்பதும், ஒரேயொரு நிறுவனத்திடம் இவ்வளவு பெரிய மோசடி நடைபெற்றது தற்போது அம்பலமான நிலையில், பிற பேமெண்ட் கேட்வே நிறுவனங்களும் இவ்வாறு மோசடி செய்யப்பட்டதா என்ற கேள்விகளும் எழுகின்றன.


ஆன்லைன் மோசடியில் தனிநபர்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் நிலையில், மிகப் பெரிய பேமெண்ட் கேவே நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக இருக்கும் என்பது புரிந்துக் கொள்ளக்கூடியது அப்படியிருந்தாலும்,  ரூ.16,180 கோடி மதிப்பிலான பணம் மோசடி என்பது மிகப் பெரிய அதிர்வை ஏற்படுத்தும். இனிமேல் இது தொடர்பான கடுமையாக நடவடிக்கைகள் எடுப்பது அவசியமானது.


மேலும் படிக்க | Online Scam: வங்கியில் பழைய போன் நம்பரை கொடுத்திருக்கிறீர்களா... உடனே அதை மாற்றுங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ