தேசிய ஓய்வூதிய அமைப்பு நியமனதாரர் அப்டேட்: பணி ஓய்வூக்குப் பிறகு, அரசுப் பணியாளர்களின் சமூகப் பாதுகாப்புக்காக செயல்படும் தேசிய ஓய்வூதிய அமைப்பு திட்டம் பணியாளர்களின் வாழ்க்கையில் நிரந்தர நிம்மதியைக் கொடுக்கும் ஓய்வூதியத் திட்டம் ஆகும். பணி ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கையை நிம்மதியாக கழிக்க இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து, கணிசமான ஓய்வூதிய நிதியை உருவாக்கலாம்.  இத்திட்டத்தின் மூலம் ஓய்வூதிய பலனைப் பெற்று, வாழ்நாள் முழுவதும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்த பணத்தில் வாழலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், தேசிய ஓய்வூதிய அமைப்பில் ஓய்வூதியக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணம் வாரிசுதாரருக்கு/நியமனதாரருக்கு (Nominee) செல்கிறது.


NPS கணக்கில் நாமினி


ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (Pension Fund Regulatory and Development Authority, PEDRA) விதிகளின்படி, NPS கணக்கு வைத்திருப்பவர் ஒரு நேரத்தில் குறைந்தபட்சம் மூன்று நாமினிகளை (Nominee) தனது கணக்கில் சேர்க்கலாம்.


அதே நேரத்தில், நிதியின் முழு 100 சதவீத பங்கில், கணக்கு வைத்திருப்பவர் தனது தேவைக்கு ஏற்ப மூன்று நியமனதாரர்களுக்கும் குறிப்பிட்ட அளவு சதவிகித பணத்தை பிரித்துக் கொடுக்கலாம். ஓய்வூதியக் கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தப் பணம் நாமினிக்கு செல்லும்.


மேலும் படிக்க | மகளிர் உரிமைத்தொகை மேல்முறையீடு! போனில் பேசி தீர்வு காணும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


நாமினியைச் சேர்க்கும் போது, அனைவரின் பெயரை, எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக உள்ளிடவும், இல்லையெனில் பணத்தைப் பெறுவதில் உங்கள் நாமினி சிக்கலைச் சந்திக்க நேரிடும் என்பதால், இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.


என்பிஎஸ் கணக்கில் நாமினி


PEDRA விதிகளின்படி, ஆண் NPS கணக்கு வைத்திருப்பவர் தனது மனைவி, குழந்தைகள், பெற்றோர், தனது மகன் இறந்துவிட்டால் அவரது மனைவியான தனது மருமகளை நாமினியாக குறிப்பிடலாம். அதேசமயம், ஒரு பெண், தனது கணவர், குழந்தைகள், பெற்றோர், மாமியார் மற்றும் தனது மகன் இறந்துவிட்டால், அவரது கைம்பெண் மனைவி மற்றும் பேரக் குழந்தைகளை தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கணக்கில் நாமினியாக நியமிக்கலாம்.


NPS கணக்கு வைத்திருப்பவர், நாமினியின் பெயரை எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம். இதற்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. புதிய நாமினியின் பெயர் புதுப்பிக்கப்பட்டவுடன், நாமினியாக குறிப்பிடப்பட்ட பழைய பெயர் தானாகவே ரத்தாகிவிடும்.


மேலும் படிக்க | தமிழகத்திற்கு MGNREGA நிலுவைத்தொகையை உடனடியாக விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை


NPS கணக்கில் நாமினியை எவ்வாறு புதுப்பிப்பது?


NPS கணக்கில் நாமினியைப் புதுப்பிக்க, முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://cra-nsdl.com/CRA/ ஐப் பார்வையிடவும்


அடுத்து, அங்கு டெமோகிராபிக் மாற்றங்கள் (Demographic changes) என்ற ஆப்ஷன் இருக்கும், அதைக் கிளிக் செய்யவும்.


இதற்குப் பிறகு, தனிப்பட்ட விவரங்களை (personal details) மாற்றுவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்


இங்கே Add/Update Nomination ஆப்ஷனுக்குச் சென்று கன்ஃபர்ம் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.


பின்னர் உங்கள் NPS விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் நியமனச் செயல்முறையை முடிக்கவும்


மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் அடுத்த அதிரடி அறிவிப்பு: 50% அகவிலைப்படி, ஊதிய ஏற்றம்


இதற்குப் பிறகு, நாமினியின் பெயர், உறவு, பிறந்த தேதி மற்றும் மீதமுள்ள பிற தகவல்களை புதுப்பிக்க வேண்டும்.


அடுத்து, பதிவுசெய்யப்பட்ட நாமினி பெறும் நிதியின் பங்கு எவ்வளவு என்பதை உள்ளிடவும்


உங்கள் NPS கணக்குடன் இணைக்கப்பட்ட எண்ணில் வரும் OTPஐ அதை உள்ளிடவும்.


பிறகு, டிஜிட்டல் முறையில் கையொப்பமிட வேண்டும், பின்னர் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட எண்ணில் OTP வரும், அதை மீண்டும் ஒருமுறை உள்ளிடவும்


OTP சரிபார்ப்பு முடிந்ததும், உங்கள் NPS நியமனம் நிறைவடையும்


மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ