Budget 2021: வருமான வரி slabs பற்றி நிதியமைச்சர் ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?
நடுத்தர வர்க்கத்தினரால் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான வருமான வரி ஸ்லாப் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் எதையும் குறிப்பிடவில்லை
புதுடெல்லி: 22021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுமக்களால், அதிலும் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினரால் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்புகளில் ஒன்றான வருமான வரி ஸ்லாப் தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் எதையும் குறிப்பிடவில்லை. இதன் பொருள் ஒரு நபர் தற்போது செலுத்தும் வருமான வரியையே தொடர்ந்து செலுத்த வேண்டும்.
ஆனால், நிதியமைச்சர் (Finance Minister) தனது கடந்த ஆண்டு பட்ஜெட் (Union Budget 2021) உரையில், சீதாராமன் ஒரு புதிய ‘எளிமைப்படுத்தப்பட்ட’ வருமான வரி என்பதை அறிவித்திருந்தார். அதன்படி, ஆண்டு வருமானம் 50,000 ரூபாய் முதல் 2,50,000 ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் எந்த வரியையும் தாக்கல் செய்யத் தேவையில்லை.
Also Read | இந்தியாவின் முதல் Finance Minister சண்முகம் செட்டி முதல் நிர்மலா சீதாராமன் வரை...
ஆண்டுக்கு 2,50,000 ரூபாய் முதல் 5,00,000 ரூபாய் சம்பாதிப்பவர்கள் 5% மற்றும் 5,00,000-, 7,50,000 ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்கள் 10% என இருந்வரி செலுத்த வேண்டும். 7,50,000 ரூபாய் முதல், 10,00,000 வரை ஆண்டு வருமானம் இருப்பவர்கள் 15% வரி செலுத்த வேண்டும்.
பத்து லட்சம் ரூபாய் முதல், பனிரெண்டரை லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பவர்கள் 20% என்ற விகிதத்தில் வரி செலுத்த வேண்டும். அதற்கு அடுத்த ஸ்லாப் 12,50,000 - ₹ 15,00,000 வரையில் சம்பாதிப்பவர்களுக்கானது. இந்த ஸ்லாப்பில் வருபவர்கள் 25% வரி செலுத்த வேண்டும், 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் 30% வரி செலுத்த வேண்டும்.
Also Read | BUDGET 2021: பட்ஜெட்டின் முக்கிய எதிர்பார்ப்புகள்
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் (Digital Budget) செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
இதுவரை இல்லாத அளவாக 6.48 கோடி பேர் வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். வட்டி வருமானத்தை நம்பியுள்ள மூத்த குடிமக்களுக்கு வரி தாக்கலில் இரு்து விலக்கு அளிக்கப்படுகிறது. 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருமான வரி (Tax) கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை. ஓய்வூதியம், வட்டி ஆகியவற்றை மட்டும் நம்பியிருந்தால் கணக்கு தாக்கல் செய்ய வேண்டாம். வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை.
ALSO READ | நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன் தர இலக்கு நிர்ணயம்!
இந்த ஆண்டு நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் வருமான வரி செலுத்துவது தொடர்பான எந்தவொரு அறிவிப்பும் இல்லை. என்பதால் இந்த விகிதங்கள் ‘விரும்பினால்.’ இந்த விகிதங்களில் தங்கள் வரிகளை செலுத்த விரும்புவோர் சில விலக்குகளையும் அவர்கள் 2019-20 நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய ஸ்லாப்களின் படி தொடர்ந்து வரி செலுத்தலாம், கடந்த ஆண்டு பெற்ற விலக்குகளையே தொடர்ந்து பெறலாம்.
இந்தியாவின் முதல் முழுநேர நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதல் பெண் என்ற சிறப்பு பெற்ற திருமதி நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman), 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்யத் தேவையில்லை என்று விலக்கு அறிவித்தார். ஓய்வூதியம் மற்றும் வட்டி வருமானம் மட்டுமே வருவானமாக உள்ளவர்கள் இனிமேல் ITR தாக்கல் செய்ய வேண்டாம்.
ALSO READ | நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR