சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்..!
மக்களவையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான (Union Budget 2021) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை குழுவினர் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்தனர். அவரிடம் பட்ஜெட் தாக்கல் தொடர்பாக எடுத்துரைத்தனர். அதன்பின்னர் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் (Nirmala sitharaman), இணை மந்திரி அனுராக் தாகூர் மற்றும் நிதித்துறை அதிகாரிகள் பாராளுமன்றத்திற்கு புறப்பட்டனர். முதலில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் (Digital Budget) செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது.
நிர்மலா சீதாராமனின் முக்கிய பட்ஜெட் அறிவிப்புகள்:-
- ரூ.16.5 லட்சம் கோடிக்கு விவசாய கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு.
- நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் 1.72 லட்சம் கோடி மதிப்பிற்கு விவசாய பொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.
- அரசின் தானிய கொள்முதல் மூலம் ஒராண்டில் கூடுதலாக ஒன்றரை கோடி விவசாயிகள் பயனடைந்து உள்ளனர்.
- நடப்பாண்டு, நடப்பாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி விவசாய கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ALSO READ | நாடு முழுவதும் உள்ள அகல ரயில் பாதைகள் 2023-க்குள் மின்மயமாக்கப்படும்!
- நெல் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு ரூ.72,752 கோடியும், கோதுமை விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு ரூ.75,060 கோடியும், பருத்தி விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலைக்கு ரூ.27,975 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- வேளாண்துறையில் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும்
- 2022 ஆம் ஆண்டுக்குள் ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு விற்கப்படும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
- சிறு, குறு தொழில்கள் வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.
- 100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் 32 மாநிலங்களில் செயல்படுத்தப்படும்.
- வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும். விவசாயக் கடன் இலக்கு இந்த நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடியாக உயர்த்தப்படுகிறது.
- வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை 1.5 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. நெல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மொத்த தொகை 2020-21ல் ரூ.1.72 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 5 முக்கிய இடங்களில் மீன்பிடி மையங்கள் அமைக்கப்படும்.
- சுகாதாரத்துறைக்கு ஒட்டுமொத்தமாக 2.23 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.
- 75 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தேவையில்லை.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR