International Women's Day: நோகாமல் நோம்பு கும்பிட முடியாது என்ற ஒரு பிரபலமான சொலவடை (No pain, no gain) உண்டு. ஏதாவது சாதிக்க விரும்பினால், நீங்கள் ரிஸ்க் எடுக்க வேண்டியிருக்கும். குறிப்பாக முதலீட்டின் விஷயத்தில், எவ்வளவு ஆபத்து உண்டோ, அந்த அளவுக்கு லாபமும் உண்டு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெண்களின் சக்தியும், பொறுப்புணர்ச்சியும், தாங்கும் திறனும் அதிகம் என்பது உலகமறிந்த ரகசியம். அதிலும், இளம் பெண்கள் முதலீட்டாளர்கள் பங்குகள் போன்ற அதிக ஆபத்து மற்றும் அதிக வருமானம் தரும் சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஒரு கணக்கெடுப்பின்படி, நிலையான வைப்புத்தொகை (எஃப்.டி) போன்ற பாதுகாப்பான முதலீட்டு விருப்பங்களை விட அதிக ரிஸ்க் உள்ள முதலீடுகளில் பெண்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புகின்றனர்.


Also Read | International Women’s Day: Top-20 தலைசிறந்த பெண், தமிழச்சி தமிழிசை சவுந்தரராஜன் 


அதிலும் குறிப்பாக, 18 முதல் 25 வயது வரையிலான பெண்கள் அதிக ஆபத்து நிறைந்த துறைகளில் முதலீடு செய்ய மூன்று மடங்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.


Groww என்ற நிறுவனம் இந்த கணக்கெடுப்பை எடுத்துள்ளது. 28,000 பேரிடம் கேள்விகள் கேட்டு, அதிலிருந்து பெறப்பட்ட முடிவுகளின்படி இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் முதலீட்டு இலக்கு குறித்தும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கணக்கெடுப்பின்படி, இளம் பெண்களில் 57 சதவீதம் பேர் தங்கள் தனிப்பட்ட இலக்குகளை அடைய முதலீடு செய்கிறார்கள். அதே நேரத்தில், 28 சதவீதம் பேர் தங்கள் பயணங்கள் தொடர்பான இலக்கை அடையவும், 28 சதவீதம் உயர்கல்வியின் இலக்கை அடையவும் முதலீடு செய்கிறார்கள்.


Also Read | Woman Power: கைக் குழந்தையுடன் கடமையாற்றும் போக்குவரத்து கான்ஸ்டபிள்


முதலீட்டு இலக்குகள் வயதுக்கு ஏற்ப மாறுகின்றன


வருமானம் மற்றும் வயதுக்கு ஏற்ப முதலீட்டு இலக்குகள் மாறும் என்று கணக்கெடுப்பு கூறுகிறது. ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் உள்ள பெண்கள், முன்கூட்டியே ஓய்வு பெறுவதால், அதிக முதலீடு செய்வதாகக் தெரியவந்துள்ளது.


ரூ .10 முதல் 30 லட்சம் சம்பாதிக்கும் பெண்களில் 36 சதவீதமும், ஆண்டுக்கு ரூ .5 முதல் 10 லட்சம் வரை சம்பாதிக்கும் பெண்களில் 26 சதவீதமும் இதே விஷயத்தைத்தான் சொன்னார்கள். அதே சமயம், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 64 சதவீதம் பேர் குழந்தைகளின் திருமணம் மற்றும் கல்விக்காக முதலீடு செய்வதாகக் கூறினர்.


Also Read | International Women's Day 2021: வாழ்க்கையின் அஸ்திவாரமான பெண்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம்? 


முதல் தேர்வு மியூச்சுவல் ஃபண்ட் (பெண்களுக்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு)


பரஸ்பர நிதியில் முதலீடு செய்வது பெண்களுக்கு மிகவும் விருப்பமான விருப்பம் என்று கணக்கெடுப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்து ஊதிய வகைகளிலும் உள்ள பெண்கள் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். பெண்கள் தங்கத்தில் நிறைய முதலீடு செய்கிறார்கள். கணக்கெடுப்பில் கலந்துக் கொண்ட  பெண்களில் 25 சதவீதம் பேர் தங்கத்தில் முதலீடு செய்துள்ளதாகக் கூறினர். ஆண்டுக்கு ரூ .10 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் பெண்களில் 40 சதவீதம் பேர் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர்.


கிரிப்டோ கரன்ஸிகளிலும் முதலீடு (investment in cryptocurrencies)


இது தவிர, ஆண்டுக்கு 30 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் பெண்களில் ஆறு சதவீதம் பேர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக சம்பாதிக்கும் பெண்களில் நான்கு சதவீதம் பேர் மட்டுமே கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர்.


Also Read | RIP TO அப்துல் கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயர்


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR