தமிழகத்தில் OLA அமைக்கும் உலகின் மிகப்பெரும் மின்சார வாகன உற்பத்தி மையம்
உலகம் முழுவதும் தற்போது மின்சார பேட்டரி சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இப்போது இந்த வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, மக்கள் மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனத்திற்கான தேவையை உணர்ந்துள்ளார்கள்.
உலகம் முழுவதும் தற்போது மின்சார பேட்டரி சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் இப்போது இந்த வாகனங்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்த நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் டாக்ஸி சேவை வழங்கி வரும் ஓலா (OLA) நிறுவனம் மின்சார பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooter) தயாரிக்க உள்ளது.
இதற்கான தொழிற்சாலை தமிழ்நாட்டில் (Tamilnadu) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இது உலகின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி மையமாக இருக்கும். ரூ.2,400 கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த ஆலைக்காக 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. உலகின் மின்சார வாகனங்களின் தேவையில் 15%ஐ உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆலையாக இது இருக்கும்.
தொழிற்சாலையின் முக்கிய உற்பத்தி கூடம் மட்டும் 150 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்காக ரூ.2,400 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இந்த ஆலையில் 2 வினாடிக்கு ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்ற நிலையில், ஆண்டுக்கு இரண்டு கோடி ஸ்கூட்டர்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரோபோ தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட உள்ள இந்த தொழிற்சாலை மூலம் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இன்னும் சில மாதங்களில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக, ஜூன் 2021 முதல் உற்பத்தி துவங்குகிறது.
ALSO READ | இந்தியா, பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR