இந்தியா, பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்

திரிபுராவில் உள்ள பங்களாதேஷ் -  இந்திய எல்லைக்கு இடையே பாயும் ஃபெனி ஆற்றின் மீது ‘மைத்ரி சேது’ பாலம் கட்டப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 9, 2021, 02:04 PM IST
  • NH-44 க்கு மாற்று வழியாக இருக்கும். 80 கி.மீ NH-208 திட்டம் 1,078 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளது.
  • இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையில் தடை ஏதும் இன்றி பயணிக்கவும் மைத்ரி சேது உதவும்.
  • வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்தியா, பங்களாதேஷ் இடையே ‘மைத்ரி சேது’ பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார் title=

இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான 'மைத்ரி சேது'  என்னும் ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது திரிபுராவில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

திரிபுராவில் உள்ள பங்களாதேஷ் -  இந்திய எல்லைக்கு இடையே பாயும் ஃபெனி ஆற்றின் மீது ‘மைத்ரி சேது’ பாலம் கட்டப்பட்டுள்ளது.

‘மைத்ரி சேது’ என்ற பெயர் இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு உறவுகளையும் நட்பு உறவுகளையும் குறிக்கிறது என்று பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த கட்டுமானத்தை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 133 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது.

ALSO READ | உலகின் மருத்துவ மையமாக திகழும் இந்தியா: அமெரிக்க மருத்துவ விஞ்ஞானி பாராட்டு

1.9 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் பங்களாதேஷில் உள்ள ராம்கர் பகுதியையும் இந்தியாவின் சப்ரூம் பகுதியையும் இணைகிறது.

இந்தியாவிற்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான மக்கள் போக்குவரத்திற்கும், வர்த்தகம் மேம்பாட்டிற்குமான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க உள்ளது என்று PMO தெரிவித்துள்ளது.

இந்த பாலத்தின் மூலம், திரிபுரா இப்போது சப்ரூமில் இருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்தை எளிதில் அணுகக்கூடிய ‘வடக்கு கிழக்கின் நுழைவாயில்’ ஆகிவிட்டது என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியுள்ளது.

பிரதமர் மோடி (PM Narendra Modi),  சப்ரூமில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி அமைப்பதற்கான அடிக்கலலையும் நாட்டினார்.

இந்த பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருட்கள் மற்றும் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கவும், வடகிழக்கு மாநிலங்களின் உற்பத்திகளுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை வழங்கவும், இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையில் தடை ஏதும் இன்றி பயணிக்கவும் உதவும் என்று PMO தெரிவித்துள்ளது.

சுமார் 232 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை இந்திய நில துறைமுக ஆணையம் மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷாஹரில் உள்ள யூனகோட்டி மாவட்ட தலைமையகத்தை கோவாய் மாவட்ட தலைமையகத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை (NH) -208 திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இது NH-44 க்கு மாற்று வழியாக இருக்கும். 80 கி.மீ NH-208 திட்டத்தை தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் 1,078 கோடி ரூபாய் செலவில் அமைக்க உள்ளது

63.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மாநில அரசு உருவாக்கிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் பிற மாவட்ட சாலைகளையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் , அனைத்து விதமான வானிலையிலும் பயணம் செய்ய ஏதுவானதாக இருக்கும்

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (நகர்ப்புறம்) இன் கீழ் கட்டப்பட்ட 40,978 வீடுகளையும் மோடி திறந்து வைப்பார்.

இது தவிர மேலும் சில கட்டமைப்பு திட்டங்களை தொடக்கி வைத்துள்ளார்., சில வற்றிற்கு அடிக்கல் நாட்டியுள்ளார்.

ALSO READ | அனைத்தும் உடைந்த நிலையிலும் உங்கள் உறுதி உடையவில்லை: IT Sector-க்கு PM Modi புகழாரம்
 

Trending News